சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறுவன் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீதான நடவடிக்கை வாபஸ் இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வருவதால் சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர வேண்டும் என்று அரசுத் தரப்பில் கூறியதோடு, பணியிடை நீக்கம் செய்த ஆவணங்களையும் தாக்கல் செய்திருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ் மற்றும் தேனியைச் சேர்ந்த பெண் விஜயஸ்ரீ இருவரும் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரத்தில் பெண்ணின் குடும்பத்தினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இளைஞர் தனுஷின் சகோதரரை கடத்தினர், சில மணி நேரங்களிலேயே விட்டு சென்றனர்.

adgp jayaraman police Supreme Court

சிறுவன் கடத்தல் வழக்கு

இதில் கடத்தலுக்கு பயன்படுத்தியது ஏடிஜிபி ஜெயராமின் அரசு வாகனம் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தியை விசாரிக்க முயற்சித்தனர். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அப்போது ஏடிஜிபி ஜெயராம் ஆஜரான நிலையில், உடனடியாக அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜால் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஏன் சஸ்பெண்ட்?

அப்போது விசாரித்த நீதிபதிகள், சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியது. தொடர்ந்து சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழக அரசின் ஆலோசனை பெற்று பதிலளிக்க உத்தரவிட்டது.

தமிழக அரசு பதில்

இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் உஜ்ஜால் புயான் மற்றும் மன்மோகன் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால், பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும். வழக்கில் ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக கருதுவதால், சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என்று பதில் அளிக்கப்பட்டது.

ஆவணங்கள் தாக்கல்

அதேபோல் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் தமிழக அரசு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றத்தில் வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட இருப்பதாக உள்ளோம். ஜெயராம் வழக்கை வேறு ஏதேனும் சிறப்பு விசாரணை பிரிவுக்கு மாற்ற முடியுமா? என்ற கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை சிறிது நேரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. இதன் காரணமாக ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்றே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+