டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா- சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் (Active Cases) தமிழகம் தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18,55,745. இதில் 38,938 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதித்து சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,30,509. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்ச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,86,298.

Tamilnadu moves Fourth Place in Coronvirus Active cases

மாநிலங்களைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,50,196. இங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,87,030. மகாராஷ்டிராவில் மரணங்கள் எண்ணிக்கை 15,842. இம்மாநிலத்தில் தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,47,324.

அரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்அரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்

மகாராஷ்டிராவை அடுத்து கொரோனா மொத்த பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. மொத்தம் 2,63,222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,02,283. இதனால் தமிழகத்தில் தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 56, 698மட்டும்.

ஆந்திராவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 76,377; கர்நாடகாவில் 74,477 பேர் என்கிறது மத்திய அரசு.

English summary
Tamilnadu moved Fourth Place in Coronvirus Active cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X