தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவால்.. தேர்தல் ஆணையத்தில் மாணவர்கள் புகார்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சித்தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர்.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசி இருக்கிறார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரச்சனை என்ன
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ கால் ஒன்று தேர்தலை ஒட்டி டெல்லி மக்களுக்கு சென்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவால் ஆடியோவில் பேசி இருந்தார். அதில், டெல்லியில் பிற மாநில மக்களின் ஆதிக்கம் அதிகம் ஆக்கிவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

மாணவர்கள் கண்டனம்
இதற்கு தற்போது டெல்லி பல்கலையில் படிக்கும் தமிழ் மாணவர்களின் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ள கருத்தில், ஒரு மாநில முதல்வர் இப்படி பேச கூடாது. நாங்கள் யாருடைய வாய்ப்பையும் பார்க்கவில்லை. நாங்கள் திறமையை வைத்து மதிப்பெண் மூலம் மேலே வந்து இருக்கிறோம்.

உண்மை என்ன
டெல்லி பல்கலை.யில் அதிகம் படிப்பது, உத்தர பிரதேச மற்றும் பஞ்சாப் மாநில மக்கள்தான். ஆனால் அவர்களை விட்டுவிட்டு எங்களை எதிர்ப்பது ஏன். எங்களை இப்படி பிரித்து தனியாக நிற்க வைப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழகத்தை பற்றி மட்டும் இவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்று சங்கத்தில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

புகார் அளித்துள்ளனர்
இதுகுறித்து தற்போது இந்த தமிழக மாணவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மக்களிடையே பிரிவினையை தூண்டி வாக்கு கேட்கிறார் கெஜ்ரிவால் என்று புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications