காவிரி நடுவர் மன்றம் போல தென்பெண்ணை தீர்ப்பாயம்- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 2 மாதம் அவகாசம்!
டெல்லி: காவிரி நடுவர் மன்றம் போல தென்பெண்ணை நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 2 மாதம் அவகாசம் வழங்கி உள்ளது. மத்திய அரசுக்கு அவகாசம் தரக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழ்நாடு- கர்நாடகா இடையே ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே நீடித்து வரும் விவகாரம். இந்த பிரச்சனையில் காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு அநீதியானது என்றாலும் ஓரளவு பிரச்சனையின் உக்கிரத்தை தணித்துள்ளது.

காவிரியை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யர்கோல் என்னும் இடத்தில் அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடகா அரசு மேற்கொண்டது. கர்நாடகாவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை தடுக்க கோரியும் தென்பெண்ணை நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க வலியுறுத்தியும் 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசை அணுக வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் முதலில் அறிவுறுத்தியது. இதனால் மத்திய அரசிடம் தென்பெண்ணை நடுவர் மன்றம் அமைக்க கோரியது தமிழ்நாடு அரசு. ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாத நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது தமிழ்நாடு.
இதன்பின்னர் 2 ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய நதி நீர் ஆணையமானது நடுவர் மன்றம் குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் தற்போது புதிய முன்னேற்றமாக, தென்பெண்ணை நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த தீர்ப்பாயம் அமைக்க கால அவகாசம் கோரியது மத்திய அரசு. ஆனால் மத்திய அரசுக்கு கால அவகாசம் தரக் கூடாது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர், தென்பெண்ணையாறு நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 2 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications