செந்தில் பாலாஜிக்கு ‘செக்’ வைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை.. சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார்களுக்கான டெண்டர் விட்டதில் முறைகேடு, சட்டவிரோதமாக பார் நடத்தியது, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஜூலை 28 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

Senthil balaji

திமுக ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த, தற்போதைய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் ஐ.ஏ.எஸ், முன்னாள் மண்டல மேலாளர்கள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் ரத்தேஷ்ராஜ், செந்தில் பாலாஜியின் முன்னாள் நேர்முக உதவியாளர் பாஸ்கர், முலனூர் எஸ்.கார்த்திக் ஆகிய 7 பேர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில், 857 டாஸ்மாக் பார்கள் நடத்த டெண்டர் கோரப்பட்டதில், முறைகேடு நடந்துள்ளது என்றும், பார்கள் உரிமம் புதுக்கப்படாமல், தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்துள்ளன என்றும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில், செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை அவரது சார்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் கபில் சிபல் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனுவிற்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் எவ்வித இடைக்கால உத்தரவோ அல்லது முன்ஜாமீனோ வழங்கிவிடக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+