ஆஹா செம ட்விஸ்ட்.. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனத்தை வாங்கும் டாடா? காரணத்தை கேட்டால் ஷாக் ஆவீங்க
டெல்லி: நாட்டின் மிகப் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்றை டாடா க்ரூப் வாங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில வாரங்களில் இந்த டீல் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
நமது நாட்டில் உள்ள மிகப் பெரிய மற்றும் பாரம்பரியமான பிஸ்னஸ் க்ரூப் என்றால் அது டாடா தான். நூற்றாண்டைக் கடந்தும் இயங்கும் டாடா க்ரூப் , இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

பல்வேறு துறைகளிலும் டாடாவின் ஆதிக்கம் தொடரும் நிலையில், புதுப் புது துறைகளிலும் கூட டாடா க்ரூப் தொடர்ந்து முதலீடு செய்தே வருகிறது.
டாடா க்ரூப்: இதற்கிடையே டாடா க்ரூப் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனத்தை வாங்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ள பிரபல பிபிகே நிறுவனத்தில் தான் முக்கிய பங்குகளை வாங்க டாடா க்ரூப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிபிகே நிறுவனமா.. அப்படியொரு ஸ்மார்ட் போன் நிறுவனத்தைக் கேள்விப்பட்டதே இல்லையே என்று நீங்கள் சொல்லலாம்.
நாட்டின் டாப் ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஓப்போ, விவோ, ஒன் பிளஸ், ரியல்மீ, ஐகூ எனப் பல முக்கிய ஸ்மார்ட் போன் பிராண்டுகளை இந்த பிபிகே நிறுவனம் தான் நடத்தி வருகிறது. இந்தளவுக்குப் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் இந்த பிபிகே நிறுவனத்தின் கீழ் உள்ள விவோ நிறுவனத்தின் பங்குகளை பெரும் பகுதி வாங்கவே இப்போது டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இழுபறி: இதுவரை பேச்சுவார்த்தை நல்ல முறையிலேயே சென்றுள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் மதிப்பீடு இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் இதனால் டீல் இறுதியாவதில் இழுபறி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. டாடா குழுமம் இப்போது வழங்குவதை விட அதிக வேல்யூவேஷனை விவோ விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதை இறுதி செய்யவே இப்போது டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விவோ நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை டாடா வாங்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. விவோ நிறுவனத்தை டாடா வாங்கினால் அதில் பல்வேறு மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதி என்ன: நமது நாட்டின் சட்டப்படி சீன நிறுவனம் ஒன்று இந்தியாவில் தங்கள் ஸ்மார்ட்போன்களை விற்க வேண்டும் என்றால் இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்தே அவர்கள் இதைச் செய்ய வேண்டும். இந்த கூட்டு முயற்சியில் இந்திய நிறுவனத்திற்குக் குறைந்தபட்சம் 51% பங்குகள் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
டாடா பிளான்: டாடா நிறுவனமும் கூட சமீப காலமாகவே எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் ஆர்வம் காட்டி வருகிறது. விவோ இந்தியா நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் அதன் இருப்பை விரிவுபடுத்த டாடா திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது.
சமீபத்தில் தான் டாடா நிறுவனம் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது அடுத்து விவோ நிறுவனத்தையும் வாங்க முயன்று வருகிறது. இதன் மூலம் அடுத்து ஸ்மார்ட்போன் சந்தையில் டாடா க்ரூப் நேரடியாகவே நுழையலாம் என்றும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications