இதுதான் டாடா.. ரபேல் பாகங்களை தயாரிக்க முக்கிய டீல்! பிரான்ஸுக்கு வெளியே தயாரிப்பது இதுவே முதல்முறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொழில் நிறுவனமான டாடா இப்போது புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. ரபேல் ஜெட் விமானங்களுக்கான உதிரிப் பாகங்களைச் செய்யும் நடவடிக்கையில் டாடா இறங்கியுள்ளது. டாடா குழுமத்தின் இந்த புதிய முயற்சி, இந்திய விமானத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்தியா தனது ராணுவத்தைப் பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. குறிப்பாகப் பாதுகாப்புப் படையை நவீனமயமாக்க முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிநவீன போர் விமானங்கள், விமான தாங்கி கப்பல்கள், துப்பாக்கிகள் என்று நவீன ஆயுதங்களை அதிகம் வாங்கி வருகிறது.

Tata Group to Manufacture Rafale Fighter Jet Fuselage in Hyderabad by 2028

ரபேல்

இந்திய விமானப்படையில் தற்போது இருக்கும் முக்கியமான அதிநவீன ஜெட் விமானம் என்றால் அது ரபேல் தான்.. இதற்கிடையே ரஃபேல் போர் விமானங்களுக்கான முக்கிய உபகரணங்களைத் தயாரிக்க இந்தியாவின் டாடா குழுமம் ரெடியாகி வருகிறது.

இந்தியாவில் இப்போதுள்ள மிகப் பெரிய பிஸ்னஸ் குழுமம் என்றால் அது டாடா குழுமம் தான். உப்பு முதல் விமானம் வரை எல்லாமே டாடாவிடம் இருக்கிறது. ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு இப்போது நோயல் டாடா இந்த டாடா அறக்கட்டளைக்குத் தலைமை தாங்கி வருகிறார். டாடா குழுமம் இப்போது பல புதிய துறைகளில் நுழைந்து வருகிறது. குறிப்பாக உற்பத்தித் துறையில் கவனம் அதிகரித்துள்ளது.

ஒப்பந்தம்

இதற்கிடையே டாடா குழுமத்தில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ரஃபேல் போர் விமானங்களுக்குத் தேவையான நான்கு முக்கியமான உதிரிப் பாகங்களை டாடா தயாரிக்கும். இந்த உதிரிப் பாகங்கள் இந்தியா மட்டுமின்றி சர்வதச அளவில் விற்பனை செய்யப்படும் ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும். இது மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

முக்கியம்

இந்த ஒப்பந்தம் நாட்டின் ஜெட் விமான உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், சர்வதேச விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் ஒரு முக்கியமான படியாக இருக்கும். இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் அதிநவீன உற்பத்தி ஆலையை அமைக்கும். இந்த ஆலையின் தான் ரஃபேல் விமானத்தின் பின்புற பக்கவாட்டுப் பகுதிகள், பின்புறப் பகுதி, மத்திய பகுதி மற்றும் முன் பகுதி போன்ற முக்கியமான பாகங்கள் தயாரிக்கப்படும்.

இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தம்

கடந்த மாதம் தான் இந்தியக் கடற்படைக்காக 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்போது ஒரே மாதத்தில் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் டாடா வசம் வந்துள்ளது. இந்தியா 22 ஒற்றை இருக்கை ரபேல் விமானங்களையும் மற்றும் நான்கு இரட்டை இருக்கை ரபேல் விமானங்களையும் கடற்படைக்காக வாங்கவுள்ளது.

இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "விமானப் பயிற்சிக்குத் தேவையான கருவிகள், உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் என அனைத்தும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும். விமானப்படை வசம் ஏற்கனவே தற்போது இருக்கும் ரஃபேல் விமானங்களுக்கான கூடுதல் உபகரணங்களும் இதில் அடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+