புதிய நாடாளுமன்றம் கட்டும் ப்ராஜெக்ட்.. ஏலத்தில் வென்றது டாடா.. 3 கோடியால் மாறிய திருப்பம்!
டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தத்தை அனைத்து நிறுவனங்களையும் முந்தி இந்தியாவின் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் 861.90 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. லார்சன் மற்றும் டூப்ரோ ரூ. 865 கோடிக்கு ஏலத்தை சமர்ப்பித்த நிலையில் அதைவிட 3 கோடி குறைவாக ஒப்பந்த புள்ளியில் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தை கட்டும் ஒப்பந்தத்தை வென்றுள்ளது டாடா நிறுவனம்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர், புதிய நாடாளுமன்றத்தை கட்டப்படும் என்று அறிவித்தது. அதற்கான, பணிகள் நடந்து வந்தது கொரோனாவிற்கு நடுவில் அதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது.
இதன்படி புதிய நாடாளுமன்றம் கட்ட விரும்பும் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. மத்திய பொதுப்பணித்துறை இன்று ஏலத்தில் விட்டது.

வராலாற்று திட்டம்
இந்த ஏலத்தில் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்ற எல்லா போட்டி நிறுவனங்களையும் விட குறைவான தொகையில் கட்டித்தருவதாக கூறி வென்றுள்ளது. 861.90 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. லார்சன் மற்றும் டூப்ரோ ரூ. 865 கோடிக்கு ஏலத்தை சமர்ப்பித்த நிலையில் அதைவிட 3 கோடி குறைவாக ஒப்பந்த புள்ளியில் டாடா குழுமம் குறிப்பிட்டதால் புதிய நாடாளுமன்றத்தை கட்டும் வரலாற்று திட்டத்தை கைப்பற்றி உள்ளது.

எவ்வளவு நாள்
இந்தப் புதிய நாடாளுமன்றம் தற்போதைய நாடாளுமன்றத்தின் அருகிலேயே கட்டப்பட உள்ளது. நாடாளுமன்ற மாளிகைத் தோட்டத்தின் 188 வது இடத்தில் முக்கோண வடிவம் கொண்ட இந்தப் புதியக் கட்டடம் கட்டப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 21 மாதங்களில் முழுப் பணியும் நிறைவடைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு மதிப்பீடு
மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.940 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால் அதைவிட குறைவான தொகைக்கு ஏலத்தை எடுக்க பல நிறவனங்கள போட்டி போட்ட நிலையில் டாடா குழுமம் வென்றுள்ளது.

இனி என்னாகும் பழைய கட்டடம்
தற்போது நாடாளுமன்ற கட்டடம் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. வட்ட வடிவில் உள்ள இந்த பாரம்பரிய கட்டிடம் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்ட பின்னர் மற்ற தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications