எத்தனை கோடி சம்பாதித்தாலும் வருமான வரி கிடையாது! இந்தியாவில் 1 மாநிலத்திற்கே விதி விலக்கு.. ஏன்?
டெல்லி: எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் தான் இந்த விதி விலக்கு உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள யாரும் வருமான வரி கட்ட தேவையில்லை. இது ஏன் என்றும், எதற்காக இந்த ஒரு மாநிலத்துக்கு மட்டும் வருமான வரி கட்ட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஒட்டு மொத்த நாடே எதிபார்த்துக்கொண்டிருந்த பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர், மாத சம்பளம் பெறுபவர்கள் பெரிதும் எதிபார்த்து காத்துக்கொண்டிருந்த வருமான வரி உச்ச வரம்பு குறித்த மெகா அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

வருமான வரியே கிடையாது
அதாவது ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியானது. அதேபோல, வருமான வரி தாக்கல் செய்யும் முறை எளிமைப்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வருமான வரி தொடர்பான எதிபார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருக்கும். இந்தியாவில் அனைத்து மாநில மக்கள் மத்தியிலும் இந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆனால் ஒரே ஒரு மாநிலம் தவிர... ஏன் என நினைப்பது புரிகிறது. ஏனெனில், இந்தியாவில் உள்ள இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் வருமான வரியே கிடையாது. அதாவது, எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் வரி செலுத்த தேவையில்லை. அதெப்பெடி என நினைக்கிறீங்களா? வருமான வரி கட்ட தேவையில்லாத மாநிலம் எது என்பது பற்றியும் எதனால் கட்ட வேண்டியது இல்லை என்ற விவரத்தையும் இங்கே விரிவாக பார்க்கலாம்.
எதற்காக இந்த விதி விலக்கு?
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் தான் குடிமக்கள் வருமான வரி கட்ட வேண்டியது இல்லை. இந்த மாநில மக்களுக்கு தனித்துவமான நிதி சிறப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசியலமைப்பு சட்டம் பிரிவு 10 10(26AAA) சட்டப்பிரிவு 371 (F) - ன் கீழ் இந்த விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநில மக்கள் எத்தனை லட்சம் வருமானம் ஈட்டினாலும் ஒரு பைசா கூட வருமான வரியாக கட்ட வேண்டியது இல்லை.
1975 ஆம் ஆண்டு முதல்
இந்தியாவுடன் சிக்கிம் இணைந்த 1975 அம் ஆண்டே இந்த சிறப்பு சலுகையானது அளிக்கப்பட்டது. அந்த மாநில மக்களின் நலன்கள் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக இந்த சிறப்பு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் வருமான வரி கணக்கை எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில், என்னவேணா... நடக்கட்டும்.. அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்ற ரீதியில் மகிழ்ச்சியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் சிக்கிம் மக்கள்.
சிக்கிம் மாநில குடிமக்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். இதுமட்டும் இன்றி இந்திய பங்குச்சந்தைகள், மியூட்சுவல் பண்ட்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய சிக்கிம் மக்கள் பான் எண் கூட கட்டாயமாக கொடுக்க வேண்டியது தேவை இல்லை. சிக்கிம் மாநில மக்கள் பல கோடி வருமானம் ஈட்டினாலும் கூட வருமான வரியாக ஒரு பைசா கட்ட வேண்டியது இல்லை. அவர்கள் வருமான வரி ரிட்டர்னும் பைல் செய்ய வேண்டியது இல்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications