நீங்க போய் பேசிடுங்க.. ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்.. பாஜக தூது.. அமித் ஷாவின் ராஜதந்திரம்!
திமுக தலைவர் ஸ்டாலினை இன்னும் சில நாட்களில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார்.
Recommended Video
டெல்லி: திமுக தலைவர் ஸ்டாலினை இன்னும் சில நாட்களில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் பாஜக இருப்பதாக நிறைய செய்திகள் வெளியாகி வருகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முடிவோடு தற்போது தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். லோக்சபா தேர்தல் இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
இன்று ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முக்கியமான பிளான் ஒன்றுடன் அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

கேரளா முதல்வர்
கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்தும் இவர்கள் ஆலோசிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. இன்று மாலை இந்த சந்திப்பு நடக்கிறது.

காலை பேசினார்
அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் அவர் இன்று காலை போனில் பேசினார். சந்திரசேகர ராவ் மற்றும் குமாரசாமி இருவரும் சுமார் 1 மணி நேரம் போனில் பேசி இருக்கிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினை சந்திக்கிறார்
இதற்கு அடுத்தபடியாக திமுக தலைவர் ஸ்டாலினை இன்னும் சில நாட்களில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். மே 13ம் தேதி இதற்காக தேதி குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. வேறு ஒரு பக்கம் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணி குறித்து பேசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் அணி
மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க இவர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க, சந்திரசேகர ராவ் முயன்றார். அதனால்தான் இப்போது இவர் எல்லோரையும் சந்தித்து பேசி வருகிறார் என்று கூறுகிறார்கள்.

பாஜக தூது
ஆனால் இவருக்கு பின் பாஜக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இவர் சந்திக்கும் தலைவர்கள் எல்லாம் பாஜக கட்சியினர் சந்திக்க விரும்பாத தலைவர்கள். அதனால் சந்திரசேகர ராவ் மூலம் பாஜக தூது அனுப்புகிறது. பாஜக அனுப்பிய தூதின் அடிப்படையில்தான் சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்திக்க உள்ளார் என்கிறார்கள். தேர்தலுக்கு பின் கூட்டணி அமைக்கவே இந்த தூது என்று கூறுகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications