இளம் டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை.. தந்தை கைது! ஹரியானாவில் கொடூர சம்பவம்.. என்ன நடந்தது?
குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ் என்பவரை அவரது தந்தையே சுட்டுக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. திடுக்கிட வைக்கும் இந்த் சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பெற்ற மகளை தந்தையே சுட்டுக்கொலை செய்துள்ளார். ராதிகா யாதவ் (வயது 25) என்ற அந்த இளம்பெண் டென்னிஸ் வீராங்கனை ஆவார். குருகிராமில் உள்ள சுசாந்த் லோக் பேஸ் -2 பகுதியில் வசித்து வந்த ராதிகா யாதவை, அவரது தந்தையான தீபக் யாதவ் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

ராதிகா மீது பாய்ந்த 2 குண்டுகள்
பெற்ற மகள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக சுட்டு தள்ளியுள்ளார். இதில் மூன்று குண்டுகள் காரில் பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு குண்டுகள் ராதிகா யாதவ் மீது பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் தீபக் யாதவை கைது செய்தனர்.
ஹரியானாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "துப்பாக்கி குண்டு காயங்களுடன் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற போது, அவர் வீட்டில் டென்னிஸ் அகாடமி நடத்தி வந்ததும், அவரது தந்தையால் துப்பாக்கியால் சுடப்பட்டதும் தெரியவந்தது.
என்ன நடந்தது?
மகளை துப்பாக்கியால் சுட்டதை தீபக் யாதவ் ஒப்புக்கொண்டுள்ளார். ராதிகா யாதவ் டென்னிஸ் அகாடமி நடத்தி வந்தது, தீபக் யாதவிற்கு பிடிக்கவில்லை என்றும் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து இருக்கலாம் என்றும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
ராதிகா யாதவ் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். பல போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ராதிகா யாதவை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது தந்தையிடம் போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications