பஞ்சாப் பயங்கரவாதிகள்- நிழல் உலக தாதாக்கள் தொடர்பு- 6 மாநிலங்களில் 100 இடங்களில் NIA அதிரடி ரெய்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல், நிழல் உலக தாதாக்களுக்கு சொந்தமான 100 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Terror-narcotics-nexus cases: NIA raids over 100 places

நாட்டின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு ஏஜென்சியான NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள், போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல், நிழல் உலக தாதாக்களின் இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உபி, உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் இந்த அதிரடி சோதனை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மோகாவில் ராஜேந்தர் நகரில் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தல்வாண்டி பங்கேரியா, தூர்கோட், நிதவாலா கிராமங்களில் நிழல் உலக தாதாக்களுக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சார் மாவட்டத்தில் 2 இடங்களிலும் பெரோஸ்பூர் மாவட்டத்தில் 3 இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Terror-narcotics-nexus cases: NIA raids over 100 places

ஹரியானா மாநிலத்தில் சிர்சா, ஜஜ்ஜார், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குருகிராமில் தொழிலதிபர் வீடு ஒன்று என்.ஐ.ஏ. அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லி போலீசார் இதேபோல சோதனை நடத்தி பயங்கரவாதிகள், நிழல் உலக கும்பல், ஆயுத தரர்கள் என 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கனடா,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவில் குற்ற செயல்கள், பயங்கரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு இவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏராளமான வழக்குகளைப் பதிவும் செய்திருக்கின்றனர். தற்போதைய சோதனையிலும் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்பது என்.ஐ.ஏ. அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+