நடுநடுங்கும் காஷ்மீர்.. அடுத்தடுத்து 7 பேர் சுட்டுக் கொலை.. ஆளுநருடன் அமித்ஷா இன்று ஆலோசனை
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.. அடுத்தடுத்து 7 அப்பாவி சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்நிலையில், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காஷ்மீரில் சமீப காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து 4 நாளைக்கு முன்பும் இப்படித்தான் ஒரு கொடூரம் நடந்தது.
ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா பகுதியில் மக்கன் லால் பிந்தகள் ரூ என்பவர் பல வருடங்களாகவே மருந்து கடை நடத்தி வந்தார்... இவருக்கு 70 வயதாகிறது.. இவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டார்..

ஆழ்ந்த இரங்கல்
இதற்கடுத்ததாக, பந்திப்பூராவில் முகமது ஷாஃபி என்ற கார் டிரைவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.. ஒரே நாளில், ஒரே மணி நேரத்தில் 3 பேரை அடுத்தடுத்து சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார்... பிறகு, காஷ்மீரில் தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டது.. ஆனால், நேற்று முன்தினம் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கு நடந்தது.

பள்ளி
ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு தலைமை ஆசிரியர் ரூமில் ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்குள் திடீரென 2 தீவிரவாதிகள் புகுந்துவிட்டனர்.. அங்கிருந்த தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர், மற்றொரு ஆசிரியர் தீபக் ஆகியோரை ரூமுக்கு வெளியே அழைத்து வந்து, யாருமே எதிர்பார்க்காதவகையில், 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் 2 பேருமே பலியானார்கள்.

பாதுகாப்பு படை
தகவல் அறிந்து போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்... தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியும் நடக்கிறது... இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் "எதிர்ப்பு முன்னணி" என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது.. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதற்கு உமர் அப்துல்லா மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

அமித்ஷா
அங்கு பயங்கரவாதிகள் இந்துக்களை குறி வைத்து கொலை செய்து வருவது, சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைய தினம் ஆலோசனை நடத்த உள்ளார்.. இந்த ஆலோசனையின் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து இருப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது...

பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. இதனிடையே, அடுத்தடுத்து 7 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக, பயங்கரவாத செயல்களை தடுப்பதில் கைதேர்ந்த நிபுணர்கள் அடங்கிய அதிரடி படையை, அமைச்சர் அமித் ஷா அனுப்பியுள்ளார்.

அதிகாரிகள்
இதில் உளவுத் துறையினர், பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது காஷ்மீரில் அப்பாவிகளைக் கொன்ற பயங்கரவாதிகளை உடனே பிடித்து வழக்கு பதிவு செய்யும்படி அமித்ஷா உத்தரவிட்டிருந்தார்.. இதையடுத்து, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை பிரிவு தலைவர் தபன் தேகா தலைமையில் நிபுணர் குழுக்கள் காஷ்மீர் சென்றுள்ளன.












Click it and Unblock the Notifications