TET exam: ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற ”டெட்” கட்டாயம்.. விருப்பம் இல்லன்னா.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற டெட் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சிறுபான்மை நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும்
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்றும் தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம், அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், சிறுபான்மை நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? எனக்கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், உயர் அமர்விற்கு இந்த வழக்கை பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
மத்திய கல்வி உரிமைச்சட்டம்
கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுபவர்கள், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி தமிழகத்தில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இதற்கிடையே, ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர், தத்தா அமர்வு, மேற்கண்ட அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்
தீர்ப்பின் போது பல்வேறு கருத்துக்களையும் நீதிபதிகளையும் கூறியுள்ளனர். குறிப்பாக ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருக்க கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியில் தொடரும் ஆசிரியர்கள் டெட் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டு வெளியேறலாம்.
இறுதி சலுகையுடன் கட்டாய ஓய்வை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதிக்கும் பட்சத்தில் இது தொடர்பாக விசாரிக்க அதற்கான வழிமுறைகளை கண்டறிய இந்த வழக்கை உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications