Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2ஜி அலைக்கற்றை பற்றி பேசிய தம்பிதுரை! வெடித்து கிளம்பிய திமுக எம்பிக்கள்! மாநிலங்கவையில் சலசலப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநிலங்களவையில் அணுசக்தி விவாதத்தின்போது, அதிமுக எம்பி தம்பிதுரை திடீரென 2ஜி விவகாரத்தை பற்றி பேசியிருந்தார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநிலங்களவையில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று அணுசக்தி குறித்து விவாதம் எழுந்தது. இதில் பங்கேற்று பேசியிருந்த அதிமுக எம்பி தம்பிதுரை, 2ஜி அலைக்கற்றை பற்றி பேசி திமுகவை விமர்சித்தார். இதனையடுத்து திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

AIADMK DMK Rajya Sabha

அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் முன்னேற்ற மசோதா (2025) மீது இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக எம்பி வில்சன், "நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் ஒரு அணுகுண்டு இந்த மசோதா. அணுசக்தி விநியோகச் சங்கிலி இறையாண்மைச் செயல்பாடுகளிலிருந்தும், ஒன்றிய அரசாங்கத்தின் தீவிர மேற்பார்வையிலிருந்தும் அகற்றப்பட இந்த மசோதா வலியுறுத்துகிறது. இந்தச் சட்டத்தில் அமைதியானது, நிலையானது அல்லது உருமாற்றம் செய்வது எதுவும் இல்லை.

மாறாக, ஒரு தேசத்தின் மிக உணர்திறன் மற்றும் அதிக ஆபத்துள்ள அணுசக்தித் துறையைத் தனியார்மயமாக்கும் அலட்சியமான, ஆபத்தான மற்றும் ஆழமான குறைபாடுள்ள முயற்சி இது" என்று விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய தம்பிதுரை, "திமுக எம்பி வில்சன் அணுசக்தி தனியார்மயமாக்கல் பற்றி பேசினார். அவரது உரையில் நாட்டின் மற்றும் மாநிலங்களின் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தியிருந்தார். இந்த அக்கறையை நான் பாராட்டுகிறேன். அதேநேரம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை மிகவும் முக்கியமான விஷயம். ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? 2ஜிக்கு மேலே உள்ள விஷயம்தான் என்பதை சொல்ல விரும்புகிறேன்" என்று கூறினார்.

இதனை குறிக்கிட்ட அவைத்தலைவர் ஹர்ஷ்வர்தன், மசோதா மீது மட்டும் உரையாற்ற வலியுறுத்தினார். தம்பிதுரையின் பேச்சுக்கு, திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் திமுக-அதிமுக எம்பிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+