நிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ
Recommended Video
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு லோக்சபாவில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோவை திமுகவினர் சமூக அலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் பலரது பேச்சும் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன. குறிப்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிடோர் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வரிசையில் பட்ஜெட் மீது தமிழச்சி தங்கபான்டியன் பேசிய முதல் பேச்சும் வைரலாகி இருக்கிறது. அழுத்தம் திருத்தமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் அருமையான உச்சரிப்புடன் தமது உரையை அவர் தொடங்கினார்.

தமிழ் மண்ணில் இருந்து..
கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்கிற குறள் ஆகியவற்றை மேற்கோள்காட்டினார் தமிழச்சி தங்கபான்டியன். அத்துடன் சமூக நீதியையும், சமத்துவத்தையும் போற்றிய திருவள்ளுவரின் தமிழ் மண்ணிலிருந்து வருகிறேன் எனக் குறிப்பிட்டார்.

சமூகநீதி மண்
திராவிடர் இயக்கத்தின் பெருமையை சுட்டிக்காட்டி தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் செயல்படும் தி.மு.க சார்பில் இந்த சபைக்கு வந்திருக்கிறேன் என்றார்., கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் மதிப்பளிக்கும் தமிழர்களுக்காக வந்திருக்கிறேன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இறுக்கமான பாஜக
பட்ஜெட் பற்றிய விமர்சனங்களை அடுக்கடுக்காக ஆணித்தரமாக வாதிட்டார். நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட முந்தைய விவாதங்களை மேற்கோள்காட்டி வெளுத்துக் கொண்டிருந்த தமிழச்சியின் வாதத்தை ஒருவித இறுக்கத்துடன் பாஜக எம்.பி.க்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அடுக்கடுக்கான பாயிண்டுகள்
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுவர்; தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் எப்படி பறிபோயிருக்கிறது; நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை இல்லை; விவசாய கடன் தள்ளுபடி இல்லை என்பதையெல்லாம் பட்டியலில்ட்டு இந்த அரசு கார்ப்பரேட், பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகை எவ்வளவு கொடுத்திருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ50 கோடி வழங்கப்பட்டதையும் கண்டித்து பேசினார் தமிழச்சி.

வைரல் வீடியோ
அசரவைக்கும் தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த முதலாவது நாடாளுமன்ற பேச்சு திமுகவினரை கொண்டாட வைத்திருக்கிறது. அதனால் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications