தளர்த்தப்பட்ட ஊரடங்கு.. 30-40% பொருளாதாரம் மீண்டுவிடும் வாய்ப்பு.. தொழில்துறை அமைப்பு வரவேற்பு
டெல்லி: ஏப்ரல் 20ம் தேதியான இன்று பல முக்கியமான தொழில்களை மீண்டும் தொடங்க அரசு அனுமதித்தது, அதன்படி இதுபோன்ற பல தொழில்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Recommended Video
30-40 சதவிகித பொருளாதார வேகம் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று தொழில் துறை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் 21 நாட்கள் லாக்டவுன், ஏப்ரல் 14 அன்று முடிவடைந்தது, ஆனால் இப்போது ஊரடங்கு காலம் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாத பகுதிகளில், அதாவது பசுமை மண்டல பகுதிகளில், ஏப்ரல் 20 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளை ஓரளவு தொடங்க மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதேநேரம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லாக்டவுன் காலத்தில் ஒரு மாநிலத்திற்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல முடியாது.
அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக செயல்படுத்தப்பட்டால், பொருளாதார வேகம் 30 முதல் 40 சதவீதம் வரை மீட்டமைக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். லாக்டவுனால் தொழில்துறைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு காரணமாக, அடிப்படை பணிகளைத் தொடங்குவதற்கான கட்டுப்பாட்டை அரசு தளர்த்தியுள்ளது. இது தொழிலாளர்களின் வெளியேற்றத்தைத் தடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்காக பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தீபக் சூட் இதுபற்றி கூறுகையில் 'லாக்டவுன் விலக்கு என்பது பரந்த அளவில் இல்லை. தற்போதைய சுகாதார அவசரநிலையை கருத்தில் கொண்டு, நாங்கள் அரசிடமிருந்து அதை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் ஒரு சில பகுதிகளில் லாக்டவுன் தளர்வு வரவேற்கத் தக்கது. சரியாக இது செயல்படுத்தப்பட்டால், பொருளாதார வேகம் குறைந்தது 30 முதல் 40 சதவிகிதம் வரை மீட்டெடுக்கப்படும்.
இப்போது அரசின் முன்னுரிமை முதலில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதாகும். ஆனால் பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. எனவேதான், சில முக்கியமான தொழில்கள், வேலையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது. கொரோனா பாதிக்கப்படாத பகுதிகளில், குறிப்பாக, கிராமப்புறங்கள் போன்ற இடங்களில் வேலை செய்ய முடியும். இதற்காக தொழிலாளர்களை அழைத்துவர சிறப்பு வாகன வசதியை ஏற்படுத்தலாம்.
அத்தியாவசிய உணவு உற்பத்தி, சரக்கு இயக்கம், அஞ்சல் சேவைகள், கூரியர் சேவை, துறைமுகங்கள், தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி, சுரங்கம், மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு, சணல் தொழில், பேக்கேஜிங் பொருள், மருந்தியல் துறை ஆகியவற்றில் வேலைகளை துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நமது பொருளாதாரம் செயல்பட இவை அனைத்தும் அவசியமாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications