நாடு முழுவதும்... நாளை முதல் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி... மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து மதத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அங்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
திரையரங்கு கட்டணம் பெற டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துளளது.

கொரோனாவால் மூடப்பட்டன
கொரோனா காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் பல மாதம் மூடி கிடந்தது. இதனால் பல திரைப்படங்கள் ஒ.டி.டி.யில் வெளியானது. இதனை தொடர்ந்து 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது.இதற்கிடையே பொங்கலையொட்டி தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

தமிழக அரசு செய்த செயல்
இதற்கு மருத்துவ நிபுணர்கள், பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசும் இதற்கு கடும் கண்டனம் கூறியது. இதனை தொடர்ந்து 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி என்ற முடிவை தமிழக அரசு திரும்ப பெற்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

மத்திய அரசு அனுமதி
100% பார்வையாளர்களை அனுமதிக்கும்போது தியேட்டர்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை வேண்டும்
அங்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். திரைப்பட இடைவேளைகளின்போது கூட்டமாக எழுந்து செல்லக்கூடாது என்தற்கான வழிமுறைகளை தியேட்டர்கள் பின்பற்ற வேண்டும். திரையரங்கு கட்டணம் பெற டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications