என்னங்க இது. . துளி கூட பயப்படாமல் புலிக்கு உணவு கொடுத்த டிரைவர். . அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம்!
டெல்லி: காட்டில் சுற்றி திரியும் புலிக்கு அந்த வழியாக டிரக்கில் செல்லும் டிரைவர் ஒருவர் செல்லப்பிராணிகளுக்கு உணவளிப்பது போல இறைச்சி கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவைகளுக்கு அதுக்கு பிடித்தமான உணவை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்போம்.
அப்படி கொடுக்கும் உணவுகளை ருசித்து சாப்பிடும் செல்லப்பிராணிகள் நம்மிடம் அளவு கடந்த பாசத்தை காட்டும். கொஞ்சி அலவாலவி நன்றியுணர்வை வெளிப்படுத்தும்.

செல்லப்பிராணி போல. .
குறிப்பாக நாய்கள் அளவு கடந்த பாசத்தை காட்டி நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். இப்படி வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்மிடம் பாசத்தை காட்டுவதையும், நாம் கொடுக்கும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதிலும் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால், வன விலங்குகள் இப்படி செய்கிறது என்றால் நாம் வியந்து போய்விடமாட்டோம் அல்லவா... இப்படிதான் புலி ஒன்று வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி போல அதுக்கு கொடுக்கப்பட்ட இறைச்சியை வாங்கி சாப்பிடுவது நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.

இறைச்சி துண்டை கவ்விய புலி
வனப்பகுதி வழியாக செல்லும் ஒரு சாலையில் டிரக் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் அந்த சாலையில் திடீரென டிரக்கின் ஓட்டுநர் தனது வாகனத்தை நிறுத்துகிறார். பின்னர் ஜன்னல் கண்ணாடியை திறந்து விட்டு ஒரு குச்சி ஒன்றில் இறைச்சி துண்டை வெளியே எடுத்து நீட்டுகிறார். இதற்காகத்தான் காத்திருந்தது போல, வனப்பகுதியின் புதர்களுக்குள் இருந்து வரும் புலி ஒன்று டிரக் மீது தனது முன்கால்களை எட்டிப்போட்டு எழுந்து நின்று, இறைச்சி துண்டை வாங்கி புசிக்கிறது.

டிரெண்ட் ஹிட்
செல்லப்பிராணிகள் வாங்கி சாப்பிடுவது போல மிகவும் லாவகமாக புலி இறைச்சியை கவ்வி சாப்பிட்டு விட்டு ருசிபார்த்து செல்கிறது. இந்தக் காட்சிகள் தான் நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ளது. புலிகள் பற்றிய பதிவுகளை வெளியிடும் இன்ஸ்டகிராம் பக்கம் ஒன்றில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவு ஆயிரக்கணக்கான லைக்குகளை வாரி குவித்ததோடு லட்சக்கணக்கான பார்வையாளர்களையும் கடந்து டிரெண்ட் ஹிட் அடித்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் வியந்து பார்த்து ‘வாவ்' என பதிவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்களின் பலவித கருத்துகள்
சில நெட்டிசன்கள், டிரக் டிரைவரின் துணிச்சலான செயல் என்றும் மனித நேயமிக்கவர் என்றும் மனதார புகழந்து வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள், எங்கள் வீட்டு செல்லப்பிராணியான நாய் கூட இப்படி லாவகமாக எந்த பொருளையும் என்னிடம் வாங்கியது இல்லை என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு சில நெட்டிசன்கள் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். வன விலங்குகள் தானாக இரை தேடி சாப்பிடும் பழக்கம் கொண்டது. அதற்கு இப்படி உணவு கொடுத்து கெடுப்பது அதன் வாழ்க்கை முறையை கெடுப்பது என சாடியுள்ளனர். மேலும் சிலரோ வாகனங்களில் வந்து இப்படி கொடுப்பதால், வன விலங்குகள் வாகனங்களை குறிவைத்து காத்திருக்கும். இதனால், வன விலங்குகளுக்கும் ஆபத்து, பயணிப்பவர்களுக்கும் ஆபத்து... என விமர்சித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications