Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருளாதாரம் உயரப்போகிறது.. பொருளாதார ஆய்வறிக்கையால் மோடி மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு பொருளாதாரத்தை அதிகரிக்க பொருளாதார ஆய்வறிக்கை வழிகாட்டியுள்ளது என்று பாராட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

நாளை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.

The Economic Survey 2019 outlines a vision to achieve a $5 Trillion economy: PM Modi

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2020ம் நிதியாண்டில் 7 சதவீதமாக உயரக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

"பொருளாதாரம் தொடர்ந்து நிலைத்திருப்பதால் 2019-20 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாகத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

"நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை பொருளாதாரத்தின் தடை சக்திகளை உடைத்து தள்ள வேண்டும், அதே நேரத்தில் அதிக திறன் பயன்பாடு மற்றும் வணிக எதிர்பார்ப்புகளின் உயர்வு ஆகியவை 2019-20 ஆம் ஆண்டில் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், பொருளாதார ஆய்வறிக்கை, 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கான ஒரு பார்வையை கோடிட்டுக் காட்டுகிறது. இது சமூகத் துறையின் முன்னேற்றம், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் எரிசக்தி பாதுகாப்பிலிருந்து பெறப்பட்ட லாபங்களை சித்தரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+