கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையில் இடைவெளியை குறைக்கும் முடிவு: மத்திய அரசு புதிய திட்டமா?
டெல்லி: கோவிஷீல்ட் வேக்சின் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் முடிவில் மத்திய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Recommended Video
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு வேக்சின்களுக்கும் வெவ்வேறு வகையிலான டோஸ் இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது. டோஸ் இடைவெளி என்பது ஒரு டோஸுக்கும் இன்னொரு டோஸுக்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
பொதுவாக ஒரு டோஸ் வேக்சினுக்கும் இன்னொரு டோஸ் வேக்சினுக்கும் இடையில் கூடுதல் இடைவெளி விடப்பட்டால் அதன் மூலம் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இது நீண்ட கால பயனையும் கொடுக்கும். ஆனால் அதற்காக அதிக நாட்கள் இடைவெளி விடவும் கூடாது. இந்தியாவில் கோவிஷீல்ட் வேக்சின் டோஸ்களுக்கு இடையில் தற்போது 12 முதல் 16 வாரம் வரை இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது.

கோவாக்சின்
அதேபோல் கோவாக்சின் டோஸ்களுக்கு இடையில் 4 முதல் 6 வாரங்கள் இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் முதலில் 4-6 வாரங்களில் கோவிஷீல்ட் டோஸ்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அது கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது கோவிஷீல்ட் வேக்சினின் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி 12-16 வாரமாக உள்ளது.

இடைவெளி
இதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், பலன் அதிகமாக இருக்கும் என்று தேசிய வேக்சின் வல்லுநர் குழு தெரிவித்த காரணத்தால் புதிய இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது பல்வேறு சர்ச்சைகளை, விமர்சனங்களை ஏற்படுத்தியது. இரண்டு டோஸ்களுக்கு இடையிலான பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி 4-6 வாரம் மட்டுமே. பல உலக நாடுகள் இதே ஆக்ஸ்போர்ட் வேக்சினைத்தான் பயன்படுத்தி வருகின்றன.

உலக நாடுகள்
பெரும்பான்மை நாடுகள் 4-6 வார இடைவெளியை மட்டுமே கொண்டு இருக்கின்றன. அந்த நாடுகளில் இந்த வேக்சினின் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கூடுதல் இடைவெளி அமலில் உள்ளது கேள்விகளை எழுப்பியது. முன்னதாக பேட்டி அளித்த நிதி ஆயோக் தலைவர் என்கே அரோரா கோவிஷீல்ட் டோஸ்களின் இடைவெளியை 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மட்டும் குறைக்கும் ஆலோசனையில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை மத்திய அரசு குறைக்க போவதாக நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இடைவெளி குறைப்பு
இடைவெளி குறித்து இதற்கு முன் தவறான சில கணிப்புகள் செய்யப்பட்டன. ஆனால் இரண்டு டோஸ்களுக்கு இடையில் குறைந்த இடைவெளி விடும் நாடுகளிலும் எதிர்ப்பு சக்தி நன்றாகவே உள்ளது. சர்வதேச டேட்டா எங்களிடம் உள்ளது. இப்போது சர்வதேச புள்ளி விவரங்களுக்கு ஏற்றபடி மாற்றங்களை கொண்டு வர இருக்கிறோம். இதனால் விரைவில் கோவிஷீல்ட் இரண்டு டோஸ்களுக்கு இடையில் இடைவெளி குறைக்கப்படும், என்று தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நிர்வாகி தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications