கனமழையால் திணறும் திருப்பதி.. கர்நாடகாவில் 4 நாட்களுக்கு மழை.. ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்
கர்நாடகாவில் அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
டெல்லி: அடுத்த 4 நாட்களுக்கு கர்நாடகாவில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூரு மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சில கடலோர மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள்பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது.... இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
அதேபோல, வடகிழக்கு பருவமழையால், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மாநிலங்கள் அதிக பயன்பெறும் மாநிலங்களாகும்.. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலையில் அளவைவிட அதிகமாக பெய்து வருகிறது.

ஆந்திரா
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை பெய்து வருகிறது.. இதனால் கடந்த 2 தினங்களாகவே எங்கு பார்த்தாலும் வெள்ள காடாய் காட்சியளிக்கிறது... இதனால், தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.. இந்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், ஏழுமலையான் கோயில் மலையின் நடைப்பாதையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருப்பதி
மேலும் மலைப்பாதையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது... இதனால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. திருப்பதி நகர் முழுவதும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... இதில், வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. திருமலையில் ஏழு மலையான் கோயிலை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கியது. பக்தர்கள் தங்கும் அறைகளை விட்டு வெளியே வர முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மழை நீர் வெள்ளம் போல் பாய்ந்து செல்வதால், வாகனங்களும் மெதுவாகவே நகர்ந்து சென்றன. திருமலையில் பாப விநாசம் செல்லும் சாலை மூடப்பட்டது.

கர்நாடகா
அதேபோல, கர்நாடகாவிலும் கனமழை பெய்தது... தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு அங்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கர்நாடகாவில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூருவின் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சில கடலோர மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள்பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மழை
வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அதிகனமழையை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெரிய அளவுக்கு மழை இல்லாமல், குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாமல் கரையை கடந்துவிட்டது. எனினும், வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாலும், ஈரமான வடகிழக்கு காற்று தமிழக கடற்கரையோரம் நிலவுவதாலும், அதிக அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்காரணமாக ஆந்திரா, மற்றும் புதுவையில் மட்டும் அதிக மழை பெய்துள்ளது என்றாலும், ஆந்திர மாநிலத்தில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்?












Click it and Unblock the Notifications