மலேசியாவிலிருந்து இந்தியா வர முடியாது.. 31ம் தேதிவரை விமானங்களுக்கு தடை.. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் வருகை தர, மார்ச் 31 ஆம் தேதி வரை இந்திய அரசு தடை விதித்துள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு, இந்திய அரசு தனது பயணக் கட்டுப்பாடுகளை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. இந்த மூன்று நாடுகளிலிருந்தும் எந்த விமானங்களும் இந்தியாவில் இன்று மதியம் 3 மணி முதல் அனுமதிக்கப்படாது.

இது கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும். நேற்று ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
உலகம் முழுக்கவே விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில மாதங்கள் இதே நிலை நீடித்தால், பல விமான நிறுவனங்கள் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறத. தினமும் சராசரியாக 10 க்கும் மேற்பட்டோர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்து இருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் கொரோனா தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் இன்று மரணமடைந்துள்ளார்.
இவர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்திருந்த நிலையில் நோய்தொற்றுக்கு உள்ளாகி இருந்தார். இவருக்கு வேறு சில உடல்நல உபாதைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு யாரும் நோய் தொற்றுடன் வந்துவிட கூடாது என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications
