இது உங்க பிரச்னை... உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது... நழுவிய ஐசிசி
Recommended Video

டெல்லி:உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் சென்றனர். அந்த வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்றியது.
அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு ஐநா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாக். ஆதரவு என புகார்
இதேபோல் இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

உலககோப்பை போட்டி
இதனிடையே இந்தாண்டு நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்க கூடாது, மீறினால் உயிரிழந்த வீரர்களை அவமானம் செய்தது போல் ஆகும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தடை விதிக்க கோரிக்கை
இதே கருத்தை முன்னாள் இந்திய வீரர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியது.

ஐசிசி நிராகரிப்பு
அந்த கோரிக்கையை ஐசிசி முமுமையாக நிராகரித்து உள்ளது. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய ஐசிசி, இரு நாட்டு இடையிலான பிரச்சனையில் தலையிட முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications