டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த தருணத்திற்காக 130 கோடி இந்தியர்களும் ஆர்வத்துடன் காத்துக்கிட்டு இருக்காங்க.. பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Last 15 minutes are the most crucial time for Chandrayaan-2

    டெல்லி: சந்திரயான் 2 நிலாவில் இறங்கும் அந்த தருணத்தை காண்பதற்காக இந்தியாவின் 130 கோடி மக்களும் ஆர்வமுடன் உள்ளார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    நாளை அதிகாலை 1மணி முதல் 2 மணி வரை நிலவின் தென்துருவப்பகுதியில் சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் காணப்போகிறார்.

    The moment 130 crore Indians were enthusiastically waiting for is here: pm modi

    இந்நிலையில் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க உள்ளது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், சந்திராயன் 2 நிலவில் இறங்கும் தருணத்திற்காக 130 கோடி இந்தியர்களும் ஆர்வத்துடன் இங்கே காத்திருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் சந்திரயான்- 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. மொத்த இந்தியாவும் உலகின் பிற நாடுகளும் நமது விண்வெளி விஞ்ஞானிகளின் வலிமையை அறியப்போகிறது.

    இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை காண பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த சிறப்பான தருணத்தை பூட்டான் உள்பட பல்வேறு மாநில சிறுவர்களுடம் அங்கு வந்து என்னுடன் காணப் போகிறார்கள்.

    MyGov இணையதளத்தில் இஸ்ரோவின் விண்வெளி வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களே பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பார்க்கப் போகிறார்கள். இஸ்ரோவின் இந்த வினாடி வினா கேள்வி நிகழ்ச்சி அறிவியல் மற்றும் விண்வெளியில் இளைஞர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்கான சிறந்த அறிகுறி.

    சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்ட ஜுலை 22ம் தேதி முதல் அனைத்து அப்டேட்களையம் தவறாமல் ஆர்வத்துடன் நான் கண்காணித்து வருகிறேன். இந்த திட்டம் இந்தியாவின் சிறந்த திறமையை வெளிப்படுத்துகிறது. இதன் வெற்றி கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பயன் அளிக்கும்" என கூறியுள்ளார்.

    English summary
    pm modi on Chandrayaan - 2 : 'The moment 130 crore Indians were enthusiastically waiting for is here"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X