Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது மத்திய அரசு! தலைமை நீதிபதி சரமாரி விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது மத்திய அரசு. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பு வாதம் வைத்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மே 5ஆம் தேதி 4,750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். இந்த தேர்வு மொத்தமாக 13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நடந்தன. ஆனால் தேசிய தேர்வு முகமை குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

neet exam national testing agency dmk mk stalin politics

இன்று விசாரணை: சர்ச்சைக்குரிய மருத்துவ நுழைவுத் தேர்வான NEET-UG 2024 தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது. மே 5-ஆம் தேதி நடந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, அதை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரும் மனுவையும் சேர்த்து இன்று விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்வு தொடர்பான மொத்தம் 38 மனுக்களை விசாரிக்கிறது.

முறைகேடு: நீட்-யுஜியை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வைத்த மனுவில், தேர்வை ரத்து செய்வது சரியாக இருக்காது. பெரிய அளவிலான ஆதாரம் இல்லாத நிலையில் அதை ரத்து செய்ய கூடாது. இதனால் லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களை "தீவிரமாக பாதிக்கும்" வாய்ப்பு உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் NTA ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்தத் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்களை எதிர்த்து வேறு சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சில மனுக்களும், மொத்தமாக நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று சில மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

தேர்வை நடத்தும் என்.டி.ஏ., தனது தனி பிரமாணப் பத்திரத்தில், மேற்கண்ட காரணியின் அடிப்படையில் முழுத் தேர்வையும் ரத்து செய்வது, பொது நலனுக்கு, குறிப்பாக, மாணவர்களின் சமமான வாய்ப்புகளுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தகுதியான தேர்வர்கள் தோல்வி அடையும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறி உள்ளது.

இன்று விசாரணை: மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தவர்கள், முதலில் வாதத்தை முன்வைக்கலாம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார். இதையடுத்து குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே முறைகேடு நடந்ததாகத் தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் வாதம் வைத்தது.

உச்ச நீதிமன்ற கேள்வி: வெளிநாடுகளுக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது?.

மத்திய அரசு பதில்: தூதரகங்கள் மூலம் நீட் வினாத்தாள் அனுப்பி வைக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நீதிபதிகள் கேள்வி: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா?"

அரசு தரப்பு பதில்: ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த மாணவர்களின் மதிப்பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என்று தேசிய தேர்வு முகாமை தெரிவித்துள்ளது.

நீதிபதி: நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம். Telegram, Whatsapp போன்ற சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது. ஒரு இடம் மட்டும் இல்லாமல் பல இடங்களில் பெருமளவில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளதா?

நீதிபதிகள் கேள்வி: நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம். நீட் வினாத்தாள்கள் எப்போது எஸ்பிஐ, கனரா வங்கி லாக்கர்களுக்கு அனுப்பப்பட்டது?எப்போது திறக்கப்பட்டது?. நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டு இருந்தால் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்., என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+