உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் 4 கேள்விகள்.. ஜனாதிபதி எழுப்பியதை கவனித்தீர்களா
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், கிடப்பில் போட்டு மாநில அரசை செயல்படவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகள் எழுப்பினார். அதில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் நான்கு கேள்விகள் பற்றி பாரப்போம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், கிடப்பில் போட்டு மாநில அரசை செயல்படவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்தது.

உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கடுமையாக கண்டித்ததுடன், 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதலும் அளித்தது. அதேபோல் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவையும் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது அவசரச் சட்டம் பிறப்பிப்பதா என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.. பல்வேறு சட்ட வழிகள் குறிதது தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பினார்.
1. ஒரு மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?
2. அப்படி ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?
3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ், ஆளுநரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?
4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட்டு விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?
5. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், நீதிமன்ற உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், குடியரசுத் தலைவரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?
7. குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
8. குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக ஆளுநர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் பெற வேண்டுமா?
9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, ஆளுநரும், குடியரசுத் தலைவரும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதா?. மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட்டு விசாரிக்க அனுமதி உள்ளதா?
10. குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?
11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?
12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?
13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?
14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?" இவ்வாறு 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்திற்கு எழுப்பி இருந்தது.
இந்த 14 கேள்விகளில் ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, ஆளுநரும், குடியரசுத் தலைவரும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதா?. மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட்டு விசாரிக்க அனுமதி உள்ளதா? ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், நீதிமன்ற உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், குடியரசுத் தலைவரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா? குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக ஆளுநர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் பெற வேண்டுமா? போன்ற கேள்விகள் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்புகின்றன.
இந்த கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே மத்திய அரசு மேல்முறையீடு செய்யவோ அல்லது அவசர சட்டமோ பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பவும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications