16 வயசுல பொண்ணை வச்சிக்கிட்டு செய்யும் வேலையா இது.. சாடிய மனைவி.. ஆள் வைத்து கொலை செய்த கணவர்
பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் கணவன் உள்ளிட்ட 3 பேர் கைது
டெல்லி: "16 வயசில் பொண்ணை வச்சுக்கிட்டு செய்ற வேலையா இது? நான் ஒருத்தி இருக்கும்போது இன்னொருத்தி எதற்கு" என்று கேட்ட மனைவியை கூலி படை வைத்து கொலை செய்துள்ளார் கணவர். இதற்கு கள்ளக்காதலியான மாடல் அழகியும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
டெல்லியில் பவானா பகுதியை சேர்ந்தவர் சுனிதா, வயது 41. அவர் சோனிபட்டில் உள்ள ஃபெரோஜ்பூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் மஞ்சித். இவர் ஒரு பிசினஸ் மேன். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.

துப்பாக்கியால்
இந்நிலையில் கடந்த 29-ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு டீச்சர் சென்று கொண்டிருந்தார். அப்போது மணி காலை 8.15 இருக்கும். அந்த நேரத்தில் திடீரென டீச்சர் மீது யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே சுருண்டு விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை தூக்கி கொண்டு மகரிஷி வால்மீகி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். அங்கு வழியிலேயே சுனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

கண்டித்த டீச்சர்
டீச்சரின் இந்த படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் இது கள்ளக்காதல் கேஸ் என தெரியவந்தது. டீச்சரின் கணவர் மஞ்சித் ஒரு மாடல் அழகியுடன் கள்ள தொடர்பை வைத்திருந்திருக்கிறார். அந்த மாடல் அழகி பெயர் ஏஞ்சல் குப்தா. வயது 26. இவர்களின் கள்ளக்காதல் டீச்சருக்கு தெரியவரவும் கணவரை கண்டித்திருக்கிறார்.

கள்ளக்காதல் மோகம்
16 வயதில் நமக்கு ஒரு பெண் இருந்தும் இப்படி ஏன் செய்ய வேண்டும்? நான் இருந்தும் இன்னொருத்தியுடன் பழக எப்படி மனசு வந்தது?" என்று கேட்டிருக்கிறார். அழகியின் உறவை விட்டுவிடுமாறும் கெஞ்சியிருக்கிறார்.. கதறி இருக்கிறார்... ஆனால் கள்ளக்காதல் மோகம் காரணமாக இது எதுவுமே மஞ்சித் மண்டையில ஏறவில்லை. அதுமட்டுமல்லாமல். தனது ஆசைக்கு மனைவி இப்படியே தொந்தரவு செய்து கொண்டிருந்ததால், அவரை கொலை செய்து விடலாம் என்று திட்டம் போட்டுள்ளார்.

3 பேரும் கைது
இந்த திட்டத்திற்கு அந்த அழகியும், அவரது அப்பாவும் கூட்டு! இந்த 3 பேரும் சேர்ந்து ஒரு கூலி படையை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்கள்தான் சுனிதாவை இப்படி தாறுமாறாக சுட்டு தள்ளி கொன்றிருக்கிறார்கள். இந்த விவரம் எல்லாம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கணவர் மஞ்சித், மஞ்சித்தின் காதலி ஏஞ்சல் குப்தா, ஏஞ்சலின் அப்பா ராஜீவ் குப்தா ஆளகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications