Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோலி முடிஞ்ச்! அவ்வளவு சொல்லியும் கேட்கலையே.. பதஞ்சலி தயாரிப்புகளின் விளம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அலோபதி மருத்துவத்திற்கு எதிரான விளம்பரங்களை வெளியிடுவதாக, பதஞ்சலி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த உச்சநீதிமன்றம் அதிரடி தடை விதித்திருக்கிறது.

பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.

The Supreme Court has imposed a strict ban on the promotion of Patanjalis products

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. அதேபோல இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், "நீதிமன்ற உத்தரவை மீறி தவறான விளம்பரங்களை வெளியிட எப்படி உங்களுக்கு தைரியம் வந்தது?" என நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

பதஞ்சலி சார்பில் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்களையும், டிஜிட்டல் தளத்தில் வெளியான விளம்பரங்களின் லிங்குகளையும் காட்டி, "நாங்கள் இன்று மிகக் கடுமையான உத்தரவை பிறப்பிக்க உள்ளோம். இந்த விளம்பரங்களை பாருங்கள். கடந்தமுறை வரும்போது எல்லாவற்றையும் சரி செய்வீர்கள் என்று சொன்னீர்களே? அந்த வாக்குறுதியை எதன் அடிப்படையில் கொடுத்தீர்கள்? அலோபதி மருந்துகளை விட உங்கள் தயாரிப்புகள் சிறந்ததா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மட்டுமல்லாது, பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த நோட்டீஸ் குறித்து மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+