ஒரே வார்த்தையில் பீட்டாவை வாயடைக்க வைத்த நீதிபதிகள்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
டெல்லி: மனிதர்கள் காயப்படுகிறார்கள் உயிரிழக்கிறார்கள் எனவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா கோரிய நிலையில், இதே காரணத்தை சொல்லி குத்துச்சண்டை போட்டிகளுக்கும் தடை கேட்பீர்களா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக கோரி, 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மக்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள். சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடி போராடினார்கள். மெரினாவில் கடல் பெரிதா, மக்கள் கூட்டம் பெரிதா என்றால், மக்கள் கூட்டமே பெரிது என்கிற அளவில் இருந்தது.

அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, எதிர்க்கட்சியாக இருந்த திமுக என எல்லா கட்சிகளுமே ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தன. எல்லா கட்சிகளுமே போராட்டத்தை ஆதரித்தன. நடிகர் விஜய் முதல், கமல் வரை பல நடிகர் நடிகைகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்தனர். நேரிலேயே பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி உத்தரவு: இதையடுத்து நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.இதன்படி இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டமெல்லாம் நடந்தது. இறுதியாக சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசு தலைவரும் தமிழக ஒப்புதல் அளித்தார். சட்டமும் அமலுக்கு வந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும்நடக்க தொடங்கிய பின்னர், பீட்டா அமைப்பு பல்வேறு விஷயங்களை சேகரித்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தீர்ப்பு விவரம்: பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பின்னர், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அரசியல சாசன அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று கூறியுள்ளது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லுபடி ஆகும் என தீர்ப்பு அளித்துள்ள உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒரு பகுதி என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் எந்த விதிமுறைகளையும் மீறும் வகையில் இல்லை என்றும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இதனிடையே வழக்கின் போது விலங்குகள் கேளிக்கை பொருள் அல்ல. அவற்றை வைத்து காட்சிப்படுத்தி துன்புறுத்த கூடாது: பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வைத்த வாதம் வைத்தது. அதற்கு நீதிபதிகள். குதிரை பந்தையம் நடக்கிறது, நாய்களுக்கான பேசன் ஷோ நடக்கிறது. அது எல்லாம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதேபோல் மனிதர்கள் காயப்படுகிறார்கள் உயிரிழக்கிறார்கள் எனவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா தனது வாதத்தில் குறிப்பிட்டிருந்தது. இதே காரணத்தை சொல்லி குத்துச்சண்டை போட்டிகளுக்கும் தடை கேட்பீர்களா? நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் பிற மாநிலங்களும் தங்களது கலாச்சாரத்தை காக்க இத்தகைய வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள்து தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications