ஞானவாபி மசூதியில் லிங்கம்? அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ளன ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற வடிவம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து தெரிந்துகொள்ள கார்பன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வாரணாசியில் சுமார் 325 ஆண்டுகளுக்கு முன்னர் முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஆணையின்படி இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த மசூதி குறித்து சில சர்ச்சைகள் நிலவி வந்தன. அதாவது, இது பழைய காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்த மசூதியில் நடத்திய ஆய்வில் லிங்கம் போன்ற வடிவம் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து, இந்த மசூதி இந்து கோயிலை இடித்துவிட்டுதான் கட்டப்பட்டது என இந்துத்துவ அமைப்பினர் பிரசாரம் நடத்த தொடங்கினர்.

ஆனால், மசூதிக்கு உள்ளே வருவதற்கு முன்னர் கை, கால்களை கழுவ ஒரு நீரூற்று இருந்தது என்றும், அதைத்தான் இவர்கள் லிங்கம் போன்ற வடிவம் என்று கூறிகிறார்கள் என மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் இந்துத்துவ அமைப்பினர் இதனை ஏற்கவில்லை. எனவே மாவட்ட நீதிமன்றத்தை அணுகி இந்த லிங்கம் வடிவத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்காமல் மனுவை தள்ளுபடி செய்தது.
பின்னர் அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், இந்த லிங்க வடிவத்தின் உண்மையான வயதை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அதுவரை இந்த வடிவம் சேதமடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் அல்லது நீரூற்று போன்ற வடிவத்தை அறிவியல் தடையவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா மற்றும் புதியதாக நீதிபதியாக பதியேற்ற கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications