நச் பதிலடி கொடுத்த கனிமொழி! ஓம் பிர்லாவின் முகம் மாறிடுச்சே! லோக்சபாவில் சம்பவம்
டெல்லி: லோக்சபாவில், திமுக எம்பி கனிமொழியின் பேச்சு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. திமுகவின் கருப்புக்கொடி போராட்டம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய விஷயத்திற்கு கனிமொழி பதிலடி கொடுத்திருக்கிறார்.
லோக்சபாவில் நேற்றைய தினம், திமுக எம்பி டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியிருக்கிறார் என்று சொன்னபோது, கருப்புக்கொடி ஏற்றினால் என்ன? ஏற்றாவிட்டால் என்ன? என்று நக்கலாக சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி கேட்டிருந்தார். இந்நிலையில் கனிமொழி எம்பி இன்று பதில் கொடுத்திருந்தார்.

இன்று கனிமொழி பேசுகையில், "கருப்புக்கொடி என்பது போராட்டத்தின் அடையாளம். கருப்பு என்பது நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடி வெற்றி பெறுவோம் என்பதை உரக்க சொல்வதற்கான குறியீடு.
நீலக்கொடி என்பது அம்பேத்கர் அவர்களின் குறியீடு. ஆனால், அதே நீல நிறத்தைதான் நீங்கள் நேற்று கேவலப்படுத்தினீர்கள். அதே அம்பேத்கர்தான் எங்களுக்கு கற்பி, ஒன்றுசேர், போராடு என சொல்லிக் கொடுத்தவர்" என்று பதிலடி கொடுத்தார். கனிமொழி பேச்சால், சபாநாயகரின் முகம் மாறிவிட்டது.
தொடர்ந்து பேசிய கனிமொழி, "மகளிர் இடஒதுக்கீட்டை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறையை கொண்டு வந்திருக்கிறீர்கள். தொகுதி மறுவரையறையில் அமித்ஷா கூறியதும், மசோதாவில் இருப்பதும் ஒன்றல்ல. எம்பிக்களின் எண்ணிக்கையை 850ஆக அதிகரித்தால் பலருக்கு பேச கூட வாய்ப்பு இருக்காது. எதிர்காலத்தில் தென் மாநிலங்களிலிருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும். குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதில் கூட தென் மாநிலங்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லாமல் போய்விடும்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications