இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. 23 ஆண்டுகளில் நம்ப முடியாத மாற்றம்.. ஜி20
டெல்லி: அர்ஜென்டினா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா
உள்ளிட்ட உலகின் முதல் 20 பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 நாடுகள் உள்ளன. ஜி20 நாடுகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்துமதிப்பு 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஜி 20 நாடுகள் என்பது உலகின் மிக முக்கியமான மிகப்பெரிய பொருளாதார பலம் கொண்ட நாடுகள் ஆகும். அர்ஜென்டினா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 20 நாடுகள் அமைப்பில் உள்ளன. இந்த அமைப்பு ஜி 20 நாடுகளில் உள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து அறிக்கை வெளியிடும். குறிப்பாக ஆண்டுதோறும் ஒவ்வொரு உறுப்பினர் நாடுகள் கருப்பொருளை நிர்ணயித்து மாநாடு நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இந்தாண்டுக்கான தலைமைத்துவத்தை தென் ஆப்பிரிக்கா ஏற்று உள்ளது. இந்தாண்டுக்கான கருப்பொருளாக 'ஒற்றுமை, சமத்துவம், நிலைத்தன்மை' என்பது உள்ளது.

இந்நிலையில் இந்தியா உட்பட உலக அளவில் நிலவும் அதிகபட்ச நிதி சமத்துவமின்மை குறித்து ஆய்வு செய்யும் ஜி20 தலைமையிலான அறிக்கை, கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கிறது..
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உலகளாவிய சமத்துவமின்மை அவசர நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் காலநிலை முன்னேற்றத்துக்கு ஆபத்தாக தற்போதைய நிலை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2000 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள முதல் 1% பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்புப் பங்கு 62% அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில், சீனாவில் முதல் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு 54% அதிகரித்திருக்கிறது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது, செல்வம் குவியும் விகிதத்தில் இந்தியா சீனாவை விட அதிகமாக உள்ளதைக் காட்டியுள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை உலகளவில் புதிதாக உருவாக்கப்பட்ட மொத்த செல்வத்தில் 41% பங்கு ஆகும். உலகின் முதல் 1% பணக்காரர்களுக்குச் சென்றுள்ளது.
இதற்கு நேர்மாறாக, உலகின் கீழ்நிலையில் உள்ள பாதி (50%) மக்கள் தொகைக்கு, இந்த மொத்தச் செல்வத்தில் வெறும் 1% மட்டுமே கிடைத்திருக்கிறது.இந்த அளவு சமத்துவமின்மை "அவசரநிலை"அளவை எட்டியுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த நிலை ஜனநாயக ஸ்திரத்தன்மை, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் காலநிலை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த தீவிர சமத்துவமின்மை என்பது தவிர்க்க முடியாது கிடையாது. அதேநேரம் அந்தந்த நாடுகளின் அரசுகள் எடுத்த அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளின் விளைவு தான் என்று ஜி 20 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் தீவிர சமத்துவமின்மையின் காரணமாக பொருளாதார வளர்ச்சியை ஏழை மக்களை அடைவது தடுக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகளவில் வறுமைக் குறைப்பு நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துள்ளன , சில நாடுகளில் இது தலைகீழாக மாறியுள்ளது. தற்போது, சுமார் 230 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறார்கள். இது தொற்றுநோய்க்கு முன் இருந்ததைவிட 335 மில்லியன் அதிகமாகும்.கிட்டத்தட்ட 130 கோடி மக்கள் மருத்துவச் செலவுகளால் மட்டுமே வறுமையில் தள்ளப்படுகிறார்கள். இது போதுமான பொது சுகாதார அமைப்புகளின் பற்றாக்குறையைக் காட்டுகிறது.
அதிக சமத்துவமின்மை இருப்பது வெறும் சமூக அநீதி மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியாகவும் ஸ்திரமின்மையை ஏற்படுகிறது. செல்வம் ஒரு சிலரிடம் குவிவது, ஏழைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதுடன், ஜனநாயக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
இதை மாற்ற என்ன செய்யலாம்... சமத்துவமின்மையைக் கண்காணித்து, அதற்கான சான்றுகள் அடிப்படையிலான கொள்கை வழிகாட்டுதல்களை வழங்க, காலநிலை மாற்றத்திற்கான ஐபிசிசி போல, சமத்துவமின்மைக்கான சர்வதேச குழுவை நிறுவ வேண்டும் என்றும் இந்த ஆய்வுப் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications