டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் காந்தி குறித்து மோடி விமர்சித்ததில் எந்த தவறுமில்லை.. தேர்தல் ஆணையம் மீண்டும் அதிரடி!

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்து தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜீவ் காந்தி குறித்து மோடி விமர்சித்ததில் தவறில்லை: தேர்தல் ஆணையம் அதிரடி!- வீடியோ

    டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்து தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    பிரதமர் மோடி தொடர்ந்து மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார். ராஜீவ் காந்தியை மோடி கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

    There is no MCC violation on PM Modi on his remark against Rajiv Gandhi says ECI

    கடந்த வாரம் உத்தர பிரதேச பிரச்சாரத்தில் பேசிய மோடி, ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. போபர்ஸ் வழக்கில் சிக்கிய உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று குறிப்பிட்டார். இப்படி பிரதமர் மோடியின் பிரச்சாரம் நாளுக்கு நாள் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது.

    <strong>Exclusive:</strong> எம்பி, எம்எல்ஏ ஆகும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.. காயத்ரி ரகுராம்Exclusive: எம்பி, எம்எல்ஏ ஆகும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.. காயத்ரி ரகுராம்

    போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அதனால் மோடி பேசியது தவறான குற்றச்சாட்டு ஆகும். இதனால் இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக 8 புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த 8 புகார்களில் அனைத்திலும், மோடி மீது தவறு கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு இந்த 9வது புகார் மீதும் முடிவு எடுக்கப்பட்டது. அதில், பிரதமர் மோடி ராஜீவ் காந்திக்கு எதிராக பேசியதில் எந்த தேர்தல் விதிமுறை மீறலும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது.

    பிரதமர் மோடி பேசியது, தேர்தல் விதிகளுக்கு புறம்பானது கிடையாது, அதனால் இந்த புகாரை தள்ளுபடி செய்கிறோம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

    English summary
    There is no MCC violation on PM Modi on his remark against Rajiv Gandhi says Election Commission of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X