இந்தியாவில் பொதுமுடக்கம்...வேலை இழப்பு...சலுகைத்தொகை மறுப்பு...என்ன காரணம்!!
டெல்லி: நாட்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக எவ்வளவு பேர் வேலை இழந்து இருக்கின்றனர். எவ்வளவு பேருக்கு சமூக பாதுகாப்பு இருக்கிறது. எவ்வளவு பேர் வேலை இழப்பு சலுகைத்தொகை பெற்று வருகின்றனர் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா கருதப்படுகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்தாண்டு 2.94 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது.

வேலை இழந்தவர்களுக்கு என்று 2020, ஆகஸ்ட் 20ஆம் தேதி, சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி பெறுபவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அமைப்புசார் துறைகளில் பணிபுரிபவர்களில் இவர்கள் வெறும் 6 சதவீதம்தான் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தாலும், அரசாணை அடுத்த மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அப்படி பார்க்கும்போது, 94 சதவீதம் பேருக்கு வேலை இழப்பு சலுகைத்தொகை கிடைக்கப் போவதில்லை.
இந்த திட்டம் அடல் பீமித் வியாக்தி கல்யாண் யோஜனா என்று அழைக்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் டிசம்பர் 14ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது. 2020ஆம் ஆண்டில் ஜூலை மாதம் நிலைக்குழு கமிட்டி சமர்பித்து இருந்த அறிக்கையில், ''நாட்டில் 34.9 மில்லியன் பேர் இன்சூரன்ஸ் செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்து இருந்தது. இந்த எண்ணிக்கையும் நம்பிக்கை இல்லாத ஒன்று என்று இரண்டு காரணங்களால் கூறப்படுகிறது.
முதலில் காரணம்,தொழிலாளர் ஈட்டுறுதி இணையத்தில் இருந்த தகவல்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இதில் தகுதியில்லாதவர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்களா, வேலையை இழந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
இரண்டாவது காரணம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ தளத்தில், மொத்த தொழிலாளர்கள் 465 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 28 மில்லியன் பேர் அமைப்புசார்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். அதாவது வெறும் 6% பேர் உள்ளனர். அமைப்புசார்ந்த தொழிலாளர்களாக 437 மில்லியன் பேர் உள்ளனர். அதாவது 94% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 2017-18 ஆம் ஆண்டில் 465.1 மில்லியன் தொழிலாளர்கள் அமைப்புசார்ந்த தொழிலாளர்களாக உள்ளனர் நேரு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொழிலாளர் ஈட்டுறுதி இணையத்தில் வெளியாகும் புள்ளி விவரத்துடன் ஒத்துப் போகிறது.
அமைப்புசாரா நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலை என்ன?
இவர்களுக்கு வேலை இழப்புக்கான சலுகைத் தொகை இல்லை. இதுதவிர வேலை இழப்பு சலுகைத் தொகையாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இவர்களை அதிகாரபூர்வ தொழிலாளர்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிசி மோகனா தெரிவித்துள்ளார். இவர்கள் அரசின் தினசரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அவர்களது 90 நாட்கள் சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை சலுகைத்தொகையாக வழங்க வேண்டும் என்று பீமித் வியாக்தி யோஜனா திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து இந்த திட்டத்தின் கீழ் வெறும் 262 பேர் ரூ. 25 லட்சம் பெற்றுள்ளனர்.
ஆனால், தற்போது கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் வரும் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதன்படி இதுவரை 25 சதவீதம் என்று வழங்கப்பட்டு வந்த சலுகைதொகை இந்த புதிய திருத்தத்தில் 50 சதவீதம் என்று வழங்கப்படும். அதுவும் டிசம்பர் வரை மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஈட்டுறுதியின் அதிகாரபூர்வ தகவலின்படி 8.04 மில்லியன் பேரில் 3.03 மில்லியன் பேர் கொரோனா பொது முடக்கத்தில் வேலை வாய்ப்பை இழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் அமைப்புசார்ந்த தொழிலாளர்கள்.
அப்படியென்றால், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு யார் சலுகைத்தொகை வழங்குவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவர்கள் எவ்வளவு பேர் வேலை இழந்து இருக்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் அரசிடம் இல்லை. அரசிடம் இந்த தகவல் இல்லை. ஆனால், தனியார் நிறுவனங்கள் வைத்து இருக்கிறது என்றால், அதுவும் வேறு வேறு விதமாக புள்ளி விவரங்கள் உள்ளன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications