கோவாக்சின் போட்டு இருக்கீங்களா?? வந்தது சூப்பர் நியூஸ்.. இனியாவது உலக நாடுகளின் நிலைப்பாடு மாறுமா
டெல்லி: சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா, ஈரான், மெக்சிகோ என பல்வேறு நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள போதிலும், கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகள் இதுவரை முறையாக அறிவிக்கவில்லை.
சர்வதேச அளவில் இதுவரை எந்தவொரு நாட்டிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சில நாடுகள் தீவிர கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளன.
அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சமும் அதிகமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குச் சர்வதேச நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

வேக்சின்
தற்போதைய சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பேராயுதமாக பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளுமே வேக்சின் பணிகளையே முன்னெடுத்து வருகின்றன. அதேபோல பல நாடுகளும் வேக்சின் செலுத்தியவர்களை மட்டும் தங்கள் நாட்டில் அனுமதிக்கின்றன. அதேநேரம் எந்த வேக்சின்களுக்கு ஒப்புதல் என்பது குறித்து ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

கோவாக்சின் தடுப்பூசி
இதனால்பாதிக்கப்பட்ட வேக்சின் தான் கோவாக்சின். ஹைரதாபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு பல மாதங்களாகவே முடிவு எடுக்காமல் இருந்தது. இப்போது தான் இந்த வேக்சினுக்கு WHO அவசரக்கால அனுமதி அளித்துள்ளது. இதனால் உலக நாடுகளும் இதற்கு அனுமதி தரத் தயக்கம் காட்டி வருகின்றன.இதனால் கோவாக்சின் எடுத்துக் கொண்ட மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது கோவாக்சினுக்கு ஒப்புதல் அளித்த சில நாடுகள் கூட கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

உலக நாடுகள்
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்தாண்டு மார்ச் மாதம் மூலம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் air bubble மூலம் 28 நாடுகளுக்குச் சிறப்பு விமானச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 28 நாடுகள் உள்ள போதிலும் ஓமன், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கோவாக்சின் எடுத்துக் கொண்ட இந்தியர்களால் பயணிக்க முடியும்.
Recommended Video

கிரீஸ்
கிரீஸ் நாட்டிற்குச் செல்பவர்கள் 3 நாட்களுக்குள் செய்யப்பட்ட RT PCR நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 3 நாட்களுக்குள் செய்யப்பட்ட ரேப்பிட் ஆன்டிஜன் சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. அதேநேரம் இந்தியாவில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு நேரடியாக விமானச் சேவை இல்லை. எதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குச் சென்று அங்கிருந்து தான் கிரீஸ் நாட்டிற்குச் செல்ல வேண்டும்.

சர்வதேச நாடுகள்
ஆஸ்திரேலியா சமீபத்தில் தான் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது. அதேநேரம் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக விமானச் சேவை இல்லாததால் இந்தியப் பயணிகள் துபாய் அல்லது டோக்கியோ வழியாகவே ஆஸ்திரேலயா செல்ல வேண்டும். அதேபோல பிலிப்பைன்ஸ், மொரிசியஸ், மெக்சிகோ போன்ற நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ள போதிலும் நேரடி விமானச் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.

நிலைமை மாறுமா?
இந்தச் சூழலில் தான் தற்போது கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரக்கால அனுமதியை அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் காலங்களில் பல்வேறு நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அனுமதி அளித்தால் இந்தியப் பயணிகளுக்குச் சர்வதேச பயணம் மிக எளிமையானதாக மாறும்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications