'மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்கள்'.. ஆளுநர்களுடன் மல்லு கட்டும் தென்மாநிலங்கள்
டெல்லி: மத்திய அரசின் கைப்பாவை போல ஆளுநர்கள் செயல்படுவதாக தமிழகம், தெலுங்கானா, கேரளா மாநிலங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றன.
மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் சொல் படியே நடந்துகொள்வதாகவும் தமிழகம், கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் ஆளுநருக்கு எதிராக குறை கூறி வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று நேரடியாக தமிழக அரசு குரல் கொடுத்து வருகிறது.

ஆளுநரை திரும்பப் பெறக்கோரி
இன்னும் சொல்லப்போனால் திமுக, இது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுக்க இருப்பதாக கூறி வருகிறது. இந்த மனுவில் ஒருமித்த எண்ணம் கொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கையெழுத்திடவும் வலியுறுத்த்தப்பட்டது. இதன்படி தமிழகத்தில் திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுநரை திரும்பப் பெறக்கோரி ஜனாதிபதியிடம் அளிக்க இருக்கும் மனுவில் கையெழுத்திட்டன. அரசியல் அமைப்பு விதிகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் பொறுப்புக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர் எனவே அவரை திரும்ப பெற வெண்டுமென்று என்ற வாதத்தை முன்வைத்து திமுக கையெழுத்து பெற்றுள்ளது.

அண்டை மாநில விவகாரங்களில்
இது ஒருபுறம் இருக்க தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அண்டை மாநில விவகாரங்களில் தலையிடுவதாக திமுக விமர்சித்தது. இது தொடர்பாக முரசொலியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சித்தும் கட்டுரை வெளியாகி இருந்தது. இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் தனது பேஸ்புக்கில் பதில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த மோதலுக்கு மத்தியில் தெலுங்கானா மாநில அரசுக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே பல்வேறு விவகராங்களில் கடும் மோதல் போக்கு நிலவுகிறது.

தெலுங்கானா அரசுக்கும் ஆளுநருக்கும்
பல்கலைக்கழங்களில் ஆள்சேர்ப்பு விவகாரம் தொடர்பாக சந்திரசேகர் ராவ் மற்றும் தமிழிசை இடையே மோதல் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் யுஜிசி விதிகளின் படி ஏன் பணியிடங்களை நிரப்பவில்லை என்றும் பொதுவான தேர்வு வாரியம் அமைப்பது தொடர்பாகவும் தெலுங்கானா கல்வித்துறை அமைச்சருக்கு தமிழிசை சவுந்தரராஜன் சம்மன் விடுத்து இருந்தார். இது உள்பட பல்வேறு விவகாரங்களில் தெலுங்கானா அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

மசோதாவுக்கு கையெழுத்திட
தெலுங்கானா அரசு ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கு அனுப்பிய எட்டு மசோதக்களில் பல்கலைகழங்களில் நேரடியாக நியமனம் செய்ய வழிவகை செய்யும் மசோதாவுக்கு கையெழுத்திட ஆளுநர் தமிழிசை மறுத்துவிட்டார். இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய அரசின் கைப்பாவை என்று விமர்சித்த மாணவர்கள் ராஜ்பவனை நோக்கி போராட்டத்தில் பேரணியாக சென்று எதிர்ப்பை பதிவு செய்ய இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆளுநருக்கு அளிக்க வேண்டிய மரியாதை
அதேபோல் ஒரு மாநில ஆளுநருக்கு அளிக்க வேண்டிய உரிய மரியாதையை புரோட்டாகால் படி தெலுங்கானா அரசு கொடுக்க மறுப்பதாகவும் தமிழிசை குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த ஆண்டு குடியரசு தினத்தின் போது மாநில மக்களுக்கு உரையாற்ற தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார். அதேபோல், மாநில சட்ட சபையின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றவும் தமிழிசைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

கேரள அரசு - ஆளுநர் உறவு
இதற்கு பதிலடி கொடுத்த தெலுங்கானாவில் ஆளும் டிஆர்.எஸ் கட்சி, ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் நியமிக்கப்படும் எம்.எல்.சிக்கு கேபினட் ஒப்புதல் அளித்தும் ஆளுநர் கையெழுத்திட மறுப்பதாக குற்றம் சாட்டியது. தெலுங்கானாவில் இப்படி என்றால் கேரளாவில் இதைவிட மோசமாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையேயான உறவு உள்ளது.

கேரளாவிலும் மோதல்
பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வெளிப்படையாகவே கேரள அரசை தாக்கி பேசி வருகிறார். கேரள அரசுக்கும் ஆளுநருகும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. இதற்கு ஆளுநரும் கடுமையாக எதிர்க்கருத்துக்களை கூறியிருந்தார்.

கேபினட் ஒப்புதல் அளித்த பிறகும்
கவர்னர் பதவி என்பதே ஒழிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறி வருகிறது. ஆளுநர் பொறுப்பு தொடர்பான அரசியல் அமைப்பு விதிகள் பற்றியும் பல்வேறு கட்சிகளுடன் டெல்லியில் ஆலொசனை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டமிட்டு வருகிறது. கேபினட் ஒப்புதல் அளித்த பிறகும் மசோதாக்களுக்கு கையெழுத்திட ஆளுநர் மறுப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு உள்ளது. கேபினட் ஒப்புதல் அளித்த பிறகும் அதற்கு மேல் அதிகாரம் கொண்டவராக ஆளுநர் இருக்க முடியாது என்ற வாதத்தையும் முன்வைத்து வருகிறது.

திருப்பி அனுப்ப முடியாது
ஆளுநர் பதவி என்பது அரசியல் சாசன பொறுப்பு ஆகும். ஜனாதிபதியால் மட்டுமே ஆளுநரை நியமிக்கவும் நீக்கவும் முடியும். மசோதாவுக்கு ஒப்புதல் கோரி மாநில அமைச்சரவை அனுப்பி வைத்தால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அளிக்க முடியும். ஆனால் இரண்டாவது முறையாக அதே மசோதா ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் மீண்டும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது.
-
10ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து.. அடுத்தாண்டு முதல் எக்ஸாம் டென்சன் இல்லை.. மாநில அரசு அறிவிப்பு -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications