திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரிய வழக்கு! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
டெல்லி: மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலை (Thiruparankundram temple case) ஆய்வுக்காக இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்த விவகாரத்தில் விளக்கமளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும். அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தனியாக விசாரணையில் இருக்கிறது.

இதற்கிடையே திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபத்தைத் தினமும் 24 மணிநேரமும் நிரந்தரமாக ஏற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை அன்று முழு மலையும் விளக்குகளால் ஒளிர வேண்டும், முருக பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், அறநிலை துறையிடம் இருந்து கோயில் நிர்வாகத்தைப் பெற்று ஆய்வுக்காக இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications