நான் குடியரசுத் தலைவரானது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை - திரௌபதி முர்மு நெகிழ்ச்சி
டெல்லி: நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு, ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு தனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம் என்று கூறினார்.
Recommended Video
நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது.

வேட்பாளர்கள்
எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறைப்படி விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தந்த மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதில் 99.18% சதவீத வாக்குகள் பதிவாகின.

குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு
கடந்த 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவுக்கு தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மேடையை அலங்கரித்தனர்.

திரௌபதி முர்மு பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சிகள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். பதவியேற்றவுடன் பேசிய திரௌபதி முர்மு, "இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், உரிமைகளின் அடையாளமாக நான் இருப்பேன். புனிதமான இந்த நாடாளுமன்றத்தில் இருந்து குடிமக்களை நான் வாழ்த்துகிறேன்.

ஏழை இந்தியனின் சாதனை
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு வலு சேர்க்கின்றன. குடியரசுத் தலைவராக நான் பதவியேற்று இருப்பது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை. நான் இந்திய தேசத்தை வளமாக்க பணியாற்றிடுவேன். பழங்குடியினத்தை சேர்ந்த நான் நாட்டின் குடியரசுத் தலைவராக பதவியேற்றது ஜனநாயகத்தின் மகத்துவம்.

அனைவருக்கும் நன்றி
சிறிய கிராமத்தில் இருந்து வந்த நான் இந்த பதவிக்கு வந்தது பெருமையான தருணம். நாட்டில் ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு எனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம். என்னை குடியரசுத் தலைவராக தேர்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி." என்று கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications