"நீதிபதிகள் நியமனம்" கொலிஜியம் முறையே சிறந்தது.. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி கருத்து!
நீதித்துறையில் அரசின் அழுத்தம் இல்லை என்பதற்கு தேர்தல் ஆணைய வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே சிறந்த சான்று எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
டெல்லி: கொலிஜியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், கொலிஜியம் முறைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி .ஒய் சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நீதித்துறையில் அரசின் அழுத்தம் இல்லை என்பதற்கு தேர்தல் ஆணைய வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே சிறந்த சான்று எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்ய கொலிஜியம் என்ற அமைப்பு உள்ளது. இந்த கொலிஜியம்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை இந்த கொலிஜியம் தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. பிறகு மத்திய அரசு ஒப்புதல் அளித்து நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

வெளிப்படத்தன்மை இன்றி இருப்பதாக
இந்த கொலிஜியம் செயல்படும் முறையில் வெளிப்படத்தன்மை இன்றி இருப்பதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு முன்வைக்கும் விமர்சனமாக உள்ளது. குறிப்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கொலிஜியத்திற்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும். கொலிஜியம் அமைப்பிற்கு தெரிந்தவர்கள் அல்ல என்று கூட கிரண் ரிஜிஜூ கூறி வருகிறார்.

கொலிஜியம் முறைக்கு ஆதரவாக கருத்து
கொலிஜியஜ் அமைப்பு ஏலியன் போல செயல்படுவதாகக் கூட கிரண் ரிஜிஜூ கடுமையாக சாடியிருந்தார். கொலிஜியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், கொலிஜியம் முறைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி .ஒய் சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா டூடே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி கூறியதாவது:-

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதே
அனைத்து முறைகளும் சிறந்தவையாக இல்லை. ஆனால், நமக்கு இருப்பதில் இதுதான் சிறந்த முறையாக உள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதே இதன் நோக்கம் ஆகும். இதுதான் அடிப்படை கொள்கையாகும். நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் நீதித்துறையை வெளிப்புற தலையீடுகளில் இருந்து நாம் பாதுகாக்க வேண்டும். மாறுபட்ட பார்வை கொண்டிருப்பதில் என்ன தவறு உள்ளது? எனினும், இந்த வேறுபாடுகளை வலுவான அரசியல் அமைப்பின் சிறந்த வழிகளின் படி நான் கையாள வேண்டும். சட்ட அமைச்சருடன் பிரச்சினைகளுக்குள் நான் செல்ல செல்ல விரும்பவில்லை. நாங்கள் மாறுபட்ட பார்வைகளை கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நீதித்துறையில் அரசின் அழுத்தம் இல்லை
மேலும், வழக்குகளை எப்படி முடிவு செய்ய வேண்டும் என்பதில் அரசிடம் இருந்து எந்த ஒரு அழுத்தமும் வந்தது கிடையாது என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நீதிபதியாக எனது 23 ஆண்டு கால அனுபவத்தில் ஒரு வழக்கை எப்படி முடிவு செய்ய வேண்டும் என்று ஒருவர் கூட என்னிடம் வந்து கூறியது இல்லை. அரசிடம் இருந்து முற்றிலும் ஒரு அழுத்தம் கூட வந்தது கிடையாது. நீதித்துறையில் அரசின் அழுத்தம் இல்லை என்பதற்கு தேர்தல் ஆணைய வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே சிறந்த சான்றாகும்" என்றார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications