கருணாநிதிக்கு ‘தங்க பேனா’ பரிசளித்த விஜயகாந்த் "இதை எழுதியிருக்க " வாய்ப்பில்ல - திமுக எம்பி
டெல்லி: கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விஜயகாந்த் பெயரில் அறிக்கை வந்திருந்தாலும் அது அவரது எண்ணமாக இருக்காது என்பது குழந்தைக்கு கூட தெரியும் என்று திமுக ராஜ்ஜியசபா எம்.பி. எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "மறைந்த தலைவர் கலைஞருக்கு பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரில் ஒரு அறிக்கை வந்திருக்கிறது.
அவர் பெயரில் அந்த அறிக்கை வந்திருந்தாலும் உண்மையில் அது அவருடைய எண்ணமாக இருக்காது என்பதை தமிழ்நாட்டில் உள்ள குழந்தை கூட அறியும்!!

விஜயகாந்த் கொடுத்த தங்க பேனா
1996 ஆம் ஆண்டு அப்போதைய நடிகர் சங்கத் தலைவராக இருந்த கேப்டன் அதே மெரினா கடற்கரையில் தலைவர் கலைஞரின் திரை உலகப் பொன் விழாவிற்காக அவருக்கு விழா எடுத்து "தங்க பேனாவை" பரிசாக அளித்தார்!
கேப்டனின் பெயரில் இந்த அறிக்கையை வெளியிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சினிமாவுக்காக வைக்கப்படவில்லை
இது தலைவர் கலைஞர் பல்வேறு வெற்றித் திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியதாலோ அல்லது பல்வேறு புதினங்கள், சிறு கதைகள், தொடர்கள் எழுதியதாலோ வைக்கப்படும் பேனா சின்னம் அல்ல! இந்தப் பேனாதான் இட ஒதுக்கீட்டிற்கு கையெழுத்து போட்டு எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மற்றும் சிறுபான்மை மக்கள் கல்வி நிலையங்களில் நுழையவும் அரசு வேலை வாய்ப்புகளைப் பெறவும் காரணமாக இருந்தது!

கருணாநிதியின் கையெழுத்துக்கள்
கலைஞரின் இந்தப் பேனாதான் மகளிருக்கு சொத்தில் சம பங்கு உண்டு என்று கையெழுத்துப் போட்டு பெண்களுக்கு அப்பன் சொத்தில் பங்கை வாங்கித் தந்தது! இந்தப் பேனாதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் அரசாணையில் கையெழுத்துப் போட்டு அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றியது!
Recommended Video

தவறே இல்லை
இந்தப் பேனாவில் போட்ட கையெழுத்துதான் பல்வேறு சமூகநீதித் திட்டங்களை தமிழகத்தில் உருவாக்கியது! தமிழர்களின் வாழ்வை தமிழ்நாட்டை மேம்படுத்தி சமூகநீதியைக் காத்து வளர்ச்சியை உறுதி செய்தது. எனவே கோடிக்கணக்கான தமிழர்களை நலம் பெறச் செய்த அந்த பேனாவிற்கு சில கோடியில் சிலை வைப்பதில் ஒன்றும் தவறே இல்லை! வாழ்க தலைவர் கலைஞர்! ஓங்குக அவரது புகழ்!!" என்று பதிவிட்டுள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications