Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்சியில் இருப்பவர்கள் மன்னர்கள் மாதிரி நடக்கிறார்கள்.. ராகுலிடம் கமல்ஹாசன் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: ஆட்சியில் இருப்பவர்கள் மன்னர்களை போல நடந்து கொள்வதாகவும் ஏனெனில் அது வரலாற்றின் மிக சமீபத்திய பக்கங்களில் நிகழ்ந்த ஒன்றுதான் என நடிரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தியுடனான உரையாடலின் போது கமல்ஹாசன் இவ்வாறு பேசினார்.

பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாத யாத்திரை காஷ்மீர் வரை செல்கிறது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய ராகுலின் யாத்திரை தற்போது 12 மாநிலங்களை கடந்து தலைநகர் டெல்லியை சென்றுள்ளது. டெல்லிக்கு பாரத் ஜோடோ யாத்திரை நுழைந்த அன்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் யாத்திரையில் பங்கேற்றார்.

ராகுல் - கமல்ஹாசன் உரையாடல்

ராகுல் - கமல்ஹாசன் உரையாடல்

பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்ற பிறகு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் உரையாடியிருக்கிறார். இந்த உரையாடல் தொடர்பான பதிவு தற்போது ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தியும் கமல்ஹாசனும் நீண்ட நேரம் உரையாடியுள்ளனர். பாஜகவையும் இந்த உரையாடலின் போது இருவரும் விமர்சிக்கும் வகையில் பேசியிருக்கின்றனர். அதன் விவரம் வருமாறு:-

காந்திஜி செய்ததைதான் நீங்களும் செய்கிறீர்கள்

காந்திஜி செய்ததைதான் நீங்களும் செய்கிறீர்கள்

ராகுல் காந்தி:- பாஜகவின் நடவடிக்கை மற்றவர்களை வற்புறுத்தும் போக்கு ஆகியவற்றிற்கு மத்தியில் நீங்கள்(கமல்ஹாசன்) எடுத்து இருக்கும் முடிவு தைரியமானது.
கமல்ஹாசன்:- இது சதாரண காரியம் இல்லை. சிங்கத்தின் பிடரியை உலுக்குங்கள் என காந்தி சொன்னது எனக்கு நியாபகம் வருகிறது. இதற்குத்தான் அவர் சிறைக்கு சென்றார். நம்மிடம் அந்த பலமும் திறமையும் உள்ளது. நீங்கள் மக்களை சந்திப்பதும், பயிற்சி எடுப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மைல் கணக்காக நடக்கிறீர்கள். அது ஒரு நல்ல அனுபவம் தேசத்திற்காக போராடும் முன் அதை புரிந்து கொள்ள காந்திஜி செய்ததைதான் நீங்களும் செய்கிறீர்கள்.

பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று

பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று

ராகுல்: "இது ஒரு அருமையான அனுபவம். தமிழகத்தில் இருந்து நான் கேரளாவிற்குள் நுழைந்த போது அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. அத்தனை வித்தியாசயங்கள் இருந்தாலும் பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. பெரும் வித்தியாசமும் ஒற்றுமையும் ஒன்றோடு ஒன்று கலந்துள்ளது" என்றார்.
கமல்: அந்த பன்முகத்தன்மை தான் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

முக்கியமான விஷயம் தான்

முக்கியமான விஷயம் தான்

ராகுல்: நம்மிடையே காலம் காலமாக இருந்து வரும் திறமை மிக்க கலைஞர்களும் சிறு தொழில் செய்ப்வர்களூம் மறைக்கப்படு இருக்கிறார்கள்.
கமல்: பதவியில் இருக்கும் அரசு விவசாயிகளை ஊக்குவிப்பது மிக முக்கியம் எனக் கருதுகிறேன். கஜா புயலின் போது கவனித்தேன். அதுபோன்ற சமயங்களில் கட்சி சர்பு எல்லாம் முக்கியமற்றதாகி விடுகிறது. அவர்கள் சந்திக்கும் பேரிடர் அந்த வலி, அந்த பேரிடர் தான் முக்கியமான விஷயம். அரசியல்வாதிகள் எப்போதும் அடுத்த தேர்தலை பற்றி மட்டும் தான் பேசுவர். அதை நோக்கித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள் அது மக்களுக்கு பிடிப்பது இல்லை.

 மக்களிடம் அன்பு செலுத்துவதும்

மக்களிடம் அன்பு செலுத்துவதும்

ராகுல்: அரசியல்வாதிகளால் அதைத்தாண்டி பார்க்க முடிவது இல்லை. அதை நானும் கவனித்து இருக்கிறேன். அவர் தேர்தலில் கவனம் செலுத்தவில்லை என என்னைப் பற்றி விமர்சித்து இருக்கின்றனர். அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் கவனம் செலுத்துவது முக்கியம் தான். மக்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் அன்பு செலுத்துவதும் அதேபோல முக்கியமான விஷயம் தான். அது முக்கியமான ஒன்றாகும்.

மக்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்

மக்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்

கமல்: நடக்காமல் இருந்த கிராம சபைக் கூட்டங்களை நாங்க்ள் மீண்டும் ந்டத்த ஆரம்பித்து இருக்கிறோம். இனி அதை நகருக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டு இருக்கிறோம். மக்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் . அது ஓட்டு அரசியலாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நிச்சயமாக மக்கள் தங்கள் கருத்தை உறுதியாக எடுத்து வைக்க வேண்டும். ஓட்டு பெறுவது மட்டுமே முக்கியம் அல்ல என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். மக்கள் தங்கள் குறைகளை எடுத்து வைக்க முன் வர வேண்டும். தயங்கக் கூடாது.

மன்னராட்சியின் நினைவு

மன்னராட்சியின் நினைவு

ராகுல்: அரசியல்வாதிகளும் விளைவுகளை எதிர்கொள்ள தயராக இருக்க வேண்டும். ஒருவர் என்னிடம் கத்துகிறார் என்றால் அதன் காரணத்தை நான் அறிந்து கொள்ள விரும்ப வேண்டும். பலர் விமர்சனத்தை விரும்பவில்லை. ஆனால் விமர்சனம் மிக முக்கியமானது.
கமல்: 75 ஆண்டுகளுக்கு முன்பே நாம் சுதந்திரம் வாங்கியிருந்தாலும் நாம் இன்னும் இளம் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறோம். மன்னராட்சியின் நினைவு இன்னும் மனதில் உள்ளது.

 மன்னர்களை போல

மன்னர்களை போல

ராகுல்: இது மிகவும் ஆழமான கருத்து.
கமல்: இப்போதும் விசுவாசத்தை எதிர்பார்க்கின்றனர். ஆட்சியில் இருப்பவர்கள் மன்னர்களை போல நடந்து கொள்கிறார்கள். ஏனெனில் அது வரலாற்றின் மிக சமீபத்திய பக்கங்களில் நிகழ்ந்த ஒன்றுதான்.

மக்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல்

மக்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல்

ராகுல்: நமது முதல்வர்களையும் தலைவர்களையும் எடுத்துக்கொண்டால் பலர் ஒருதலைபட்சமான முடிவுகளையே எடுக்கின்றனர். நினைத்ததையே செய்ய நினைக்கின்றனர். மக்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது.
கமல்: அவர்களை மக்களின் சேவகர்கள் எனக்கூறினால் அதனை ஏற்றுக்கொள்வது இல்லை. நான் ஒன்றும் மக்களின் சேவகன் இல்லை. நான் அதிகாரத்தில் இருக்கிறேன் என்பார்கள். ஆனால் உண்மையில் நாம் மக்களின் சேவகர்கள்தான். அதை ஊழல் செய்வதறல்லாமல் பெருமையாக கொள்ள வேண்டும்.

இல்லாதபோதுதான் நாம் உணர்கிறோம்.

இல்லாதபோதுதான் நாம் உணர்கிறோம்.

ராகுல்: மகாத்மா காந்தி அவர்கள் முன்வைத்த டிரஸ்டி முறை.
கமல்: அதன் சாயலாவது யாரிடமாவது இருக்குமா என்று நான் காலம் காலமாக தேடிக்கொண்டு இருக்கிறேன். அவர் ஒரு தனித்துவம் வாய்ந்த உலக தலைவர். அவர் இல்லாத போதுதான் அதை நாம் உணர்கிறோம்.

அதிகம் காக்க வைக்க விரும்பவில்லை

அதிகம் காக்க வைக்க விரும்பவில்லை


ராகுல்: நான் உங்களை அதிகம் காக்க வைக்க விரும்பவில்லை. நான் தான் உங்களை விடாமல் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் அடுத்த முறை நீங்கள் டெல்லி வந்தால் நாம் ஒன்றாக உணவருந்த செல்ல வேண்டும் எனவும் ராகுல் காந்தி கமலுக்கு அழைப்பு விடுத்தார். இவ்வாறாக அந்த உரையாடல் முடிவுக்கு வந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+