Fact Check: டெல்லி கார் வெடிப்பு வழக்கு.. 3 மருத்துவர்களை கைது செய்து காவலில் வைத்துள்ளதா என்ஐஏ? உண்மை என்ன
டெல்லி: டெல்லி கார் வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான மருத்துவர் உமருடன் தொடர்பு வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உள்பட 4 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை 4 நாட்களாக தீவிர விசாரணை நடத்தியது. நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு போதிய ஆதாரங்கள் இல்லாததால் 4 பேரையும் என்.ஐ.ஏ விடுவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10 ஆம் தேதி வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் வெடித்துச் சிதறியது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் நபி, கார் குண்டு தாக்குதல் நடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

என்.ஐ.ஏ விசாரணை
டெல்லி குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார், அமீர் ரஷித் அலி பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜம்முவின் சம்போரா பகுதியை சேர்ந்த அமீர் ரஷித் அலி டெல்லிக்கு வந்து I20 காரை வாங்கி தனது பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த காரிலேயே வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இவருக்கும் டாக்டர் உமர் நபிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
வழக்கு தொடர்பாக இதுவரை 73 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். இதே வழக்கு தொடர்பாக டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேச போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தேசிய புலனாய்வு முகமை கூறியது. டெல்லியைப் போன்று நாடு முழுவதும் கார்களை பயன்படுத்தி வெடிகுண்டு தாக்குதலை நடத்த ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியிருந்தது NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.
34 வாகனங்கள் பறிமுதல்
இதைத் தொடர்ந்து டெல்லியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட vehicles பறிமுதல் செய்யப்படுகின்றன. சந்தேகத்திற்கு உரிய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கார் குண்டு வெடிப்பை நடத்திய உமர் நபி, பரிதாபாத்தில் தங்கியிருந்த வீட்டில் ரகசியமாக ஓர் ஆய்வகத்தை அமைத்துள்ளார். அவர் வெடிகுண்டு சோதனை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டாக்டர் வீட்டில் காஷ்மீர் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஹரியானாவைச் சேர்ந்த அந்த பெண் டாக்டர் காஷ்மீரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து கைப்பேசி உள்ளிட்ட சில மின்னணுப் பொருட்களை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
4 பேரும் விடுதலை
இதற்கிடையே, டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், 4 பேரையும் NIA விடுதலை செய்துள்ளது.
உறுதியான ஆதாரங்கள் இல்லை
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான மருத்துவர் உமர் உன் நபியுடன் தொடர்பு இருப்பதாக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கைதான மருத்துவர்கள், உமர் மற்றும் அல்-ஃபலா மருத்துவ பல்கலைக்கழகத்துடன் முன்பு தொடர்பு வைத்திருந்துள்ளனர். எனவே, மருத்துவர் ரேஹான், முகம்மது, முஸ்தாகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்கா ஆகிய 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்."
உண்மை என்ன?
மூன்று நாட்கள் தேசிய புலனாய்வு முகமை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், கைதான நான்கு பேருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களையோ அல்லது டிஜிட்டல் தடயங்களையோ அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை விடுவித்ததை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரும் உறுதி செய்தனர்.
எனினும், இது தொடர்பாக கூடுதல் தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. விடுதலை செய்தாலும், தேசிய புலனாய்வு முகமை அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. டெல்லி கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அதில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications