பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன
டெல்லி: பிரான்ஸில் இருந்து மேலு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வடைந்தன. பிரான்சில் புறப்பட்டு எங்கும் நிற்காமல் 7,000 கி.மீ தொடர்ந்து பறந்த இந்த விமானங்கள் இந்தியா வந்தன.
பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ரஃபேல் ஒப்பந்த விவகாரம் நாட்டில் பெரும் புயலையும் கிளப்பி இருந்தது.

இதுவரை 2 கட்டங்களாக மொத்தம் 8 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்த ரஃபேல் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்தின.
இதனிடையே மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. பிரான்ஸில் புறப்பட்டு 7,000 கி.மீ. இடைநிற்காமல் இந்தியாவை வந்தடைந்தன இந்த விமானங்கள். நடுவானில் இந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப அமீரக விமானப் படை டேங்கர் விமானம் உதவியது.
எஞ்சிய விமானங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications