73 வயது மோடியுடன் மோதும் 3 இளைஞர்கள்! பிரதமரை உறுதி செய்யப் போகும் 2 மாநிலங்கள்?
இந்தியாவின் 'இளமையான பிரதமர்' என்று தேடினால் ராஜீவ்காந்தி பெயர்தான் வரும். அவர் 40 வயதில் இந்தியாவின் பிரதமரானார். இவரைப்போல்தான் அகிலேஷ் யாதவ். 38 வயதில் உபியின் முதல்வரானார்.
இன்று 73 வயதை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடியுடன் இந்த 3 இளைஞர்கள் பலம் கொண்ட வரை முட்டி மோதத் தொடங்கி உள்ளனர். அதில் முழு பலத்துடன் முன்னால் நிற்பவர் தேஜஸ்வி யாதவ். பீகாரின் முன்னாள் துணை முதல்வர். 34 வயது இளைஞர்.

அடுத்து வருபவரும் யாதவ்தான். அகிலேஷ் யாதவ். இவருக்கு 50 வயது. இந்த இருவரின் சூத்திரதாரியாக இருப்பவர் ராகுல்காந்தி. அவருக்கு 53 வயது.
பாரத் ஜோடோ யாத்திரை மூலம் மோடி ஆட்சிக்கு வீழ்த்த நெடும்பயணம் செய்தவர், இப்போது அந்தப் பெயரை நியாய யாத்திரை என மாற்றி வட இந்தியாவில் நடையாய் நடந்து வருகிறார்.

உபியில் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெற்று வருகிறது. உபியில் மொத்தம் 402 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் பாஜகவுக்கு 252 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 286 எம்.எல்.ஏக்கள் உள்ள னர். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 108 எம்.எல்.ஏக்கள் உள்ளன. இம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி எனப் பார்த்தால் சமாஜ்வாதி தான்.

ஒரு காலத்தில், இந்திய அரசியலை ஆட்டிப்படைத்து வந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏதான் இருக்கிறார்.
மக்களவை எனப் பார்த்தால் 80 தொகுதிகள் உள்ளன. அதில் பாஜக 71 எம்பிக ளை வைத்துள்ளது. மீதம் 3 கூட்டணிக் கட்சிகளிடம் உள்ளது. அதிலும் பாஜகதான் பலமாக உள்ளது.
ஆனால், இந்த முறை இதே நிலை நீடிக்காது என்கிறார்கள். காரணம் சமாஜ் வாதி அகிலேஷ் யாதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. ஆகவே, பாஜகவுக்கு முந்தைய பலம் இல்லை.

அதை உணர்ந்துதான் அகிலேஷ் யாதவ், கடந்த சில தினங்கள் முன்னதாக ஒரு கமெண்ட் அடித்தார். பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தவுடன், அகிலேஷ் "முன்பு பாஜகவுக்கு மக்கள் இருந்தார்கள். இப்போது பாஜகவினரே பாஜகவுக்கு எதிராக உள்ளார் கள்" என்று விமர்சித்திருந்தார்.

அத்தோடு மட்டும் நிற்கவில்லை இவர், "தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவுக்கு இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன" என்று அவரது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
இப்படி உபியும் பீகாரும் இரண்டு யாதவ் கைகளுக்கு வந்துள்ளது. இங்கே அகிலேஷ் என்றால், அங்கே தேஜஸ்வி. அவர் பாட்னாவில் கூட்டிய பொதுக் கூட்டம் காந்தி மைதானத்தையே மக்கள் வெள்ளத்தால் மூழ்கச் செய்தது.

பீகாரில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில் பாஜக கூட்டணிக்கு 39 எம்பிகள் உள்ளனர். தேஜஸ்வி யாதவ் மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஒரே ஒரு எம்பிதான் உள்ளார்.
உபி மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜக கூட்டணிதான் கடந்த 2019 மக்களவைத் தேர்தல் வரை வலுவாக இருந்துள்ளது. அந்தப் பலம் இப்போது இல்லை. அதற்குக் காரணம் பீகாரில் தேஜஸ்வி நடத்திய யாத்திரை ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ராகுல் நடத்திய யாத்திரை. இந்த இரண்டும் பாஜக எதிர்ப்பை அதிகப்படுத்தி உள்ளது என்று தரவுகள் சொல்கின்றன.
பெரிய அளவில் பீகார் பக்கம் பிரதமர் தலைவைக்கவில்லை. அரசியல் ரீதியாக நிதீஷ் அணி மாறிமாறி சில அவமானங்களை மக்களிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாஜகவின் எண்ணிக்கையை உபியில் 40 அளவுக்குக் குறைத்து விட்டாலே பிரதமராக மோடி வருவதைத் தடுத்து விடலாம் என கணக்குப் போடுகிறார் அகிலேஷ்.

அதே மாதிரி பீகாரில் 20 தொகுதிகளைக் கைப் பற்றிவிட்டாலே மோடியை மீண்டும் வரவிடாமல் தடுத்துவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார் தேஜஸ்வி யாதவ்.
இந்தியாவின் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி இந்த 2 மாநிலங்களிடம்தான் உள்ளது. அந்த 2 மாநிலங்களும் 2 இளைஞர்களிடம் உள்ளன. இதற்கு மேலாக ராகுல் இந்தியா முழுவதும் காங்கிரஸ் மூலம் ஒரு தடுப்பணையை மோடிக்கு எதிராக எழுப்பி வருகிறார்.
இந்த 3 இளைஞர்கள் அந்த 73 வயது அனுபவசாலியை வீழ்த்துவார்களா?

-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications