பிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்!
திகார் ஜெயிலில் நண்பனை குத்தி கொன்ற பயங்கரம் நடந்துள்ளது
டெல்லி: வஞ்சம் தீர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், எத்தனை காலமாக இருந்தால் என்ன? என்ன வழியாக இருந்தால் என்ன? அந்த வகையில்,பழிக்கு பழி தீர்த்து கொலை செய்த நபரை கண்டு டெல்லி போலீசாரே அதிர்ந்து போய் உள்ளனர்.
டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது ஜாகிருக்கு, தன் தங்கை மீது அப்படி ஒரு பாசம்.. மைனர் பெண்.. தங்கையை உயிருக்கு உயிராக நேசித்து வருகிறார் ஜாகிர்.

ஜாகிரின் நண்பர் மெஹ்தாப்.. 27 வயதாகிறது.. ரொம்ப வருஷமாகவே இவர்கள் குடும்ப நண்பர்கள்.. அதனால் வீட்டுக்கு வந்து போக இருந்தனர்.. இந்நிலையில் ஒருநாள் ஜாகிரின் சகோதரியை மெஹ்தாப் கதற கதற பலாத்காரம் செய்துவிடுகிறார்.
இதனால் அவமானமும், மன வேதனையும் அடைந்த அந்த பிஞ்சு, தற்கொலை செய்து கொள்கிறது.. இந்த வழக்கில் மெஹ்தாப் கைதாகி ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
ஆனாலும் ஜாகிருக்கு ஆத்திரமாக கிளம்புகிறது.. நம்பிக்கை துரோகம் செய்து கழுத்தறுத்து, குடும்பத்தை கெடுத்த அந்த நண்பனை பழிவாங்க ஜாகீர் முடிவு செய்கிறார்.. ஆனால், குற்றவாளி ஜெயிலில் இருப்பதால் அவனை எப்படி கொல்வது என்பது தெரியாமல் விழிக்கிறார்.. காரணம், குற்றவாளி இருப்பது திகார் ஜெயிலில்.
அதனால் அந்த ஜெயிலுக்கு செல்ல வேண்டுமானால் தான் இன்னொரு கொலையை செய்தால்தான் முடியும் என்று நம்புகிறார்.. ஜாகிரின் மனதில் ஆறாத வடுவாக தங்கிவிட்ட அந்த காயம், மற்றொரு கொலையை செய்ய தூண்டியது.. யாரோ ஒருவரை தேவையில்லாமல் கொன்றுவிட்டு, திகாருக்குள் நுழைகிறார் ஜாகிர்.
ஆனால், அங்கும் மெஹ்தாபிடம் நெருங்க முடியாத சூழல்.. மெஹ்தாப் இருப்பது சற்று தூரமான இடத்தில், ஜாகீர் சிறை அறை இருந்தது.. அதனால் குற்றவாளியை நெருங்கி செல்ல என்ன வழி என்று யோசிக்கிறார்.. பிறகு தன்னுடன் இருந்த தன்னுடைய சிறைவாசிகளிடம் தொடர்ந்து சண்டை போட ஆரம்பிக்கிறார் ஜாகிர்.
பொறுத்து பொறுத்து போன சிறைவாசிகள், வார்டனுக்கு புகார் சொல்கிறார்கள்.. உடனே சிறை அதிகாரிகள், வேறு இடத்தில் அடைக்கிறார்கள்.. அந்த இடமும் மெஹ்தாப் சிறை அருகில் இல்லை என்பதால், திரும்பவும் வம்பிழுத்து, மெஹ்மாப் அறை அருகில் செல்லும்வரை போராடுகிறார்.. இறுதியாக, அந்த வாய்ப்பு ஜாகிருக்கு கிடைத்தது.
மெஹ்தாப்பை கொலை செய்ய நேரம் பார்த்து கொண்டே இருந்த ஜாகீர் ஜூன் 29 அன்று மெஹ்தாபை ஜெயிலிலேயே வைத்து படுகொலை செய்தார். இந்த கொலையை செய்து முடிக்க ஜாகிருக்கு 6 வருடங்கள் பிடித்தது. இதற்காகவே கத்தி போன்ற உலோக துண்டை ரெடி செய்து கையிலேயே வைத்திருந்தார் ஜாகீர். ஆத்திரம் தீர குத்தி குத்தியே மெஹ்தாபை கொன்று முடித்தார்... சினிமாவை மிஞ்சும் இந்த பழிவாங்கிய படலத்தை கேட்டு போலீசாரே மிரண்டு போயுள்ளனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications