டைம்ஸ் நவ் சர்வே: உ.பியில் பலத்த அடி வாங்கும் பாஜக.. கெத்து காட்டும் மாயா- அகிலேஷ் கூட்டணி!
2019 லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக மோசமாக தோல்வி அடையும் என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video

டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக மோசமாக தோல்வி அடையும் என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு தேர்தல் முடிவுகள் சென்ற முறை போல இருக்காது என்கிறார்கள்.
லோக் சபா தேர்தல் விறுவிறுப்பு இப்போதான் தொடங்கி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் இப்போதே வெளி வர தொடங்கி இருக்கிறது. இந்த கணிப்புகள் பாஜகவின் 5 வருட ஆட்சி எப்படி இருந்தது என்று கணிக்க உதவுகிறது.
தற்போது லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு மாநில வாரியாக வெளியாகி உள்ளது.

கோவாவில் நிலை
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, கோவாவில் இரண்டு இடங்களில் பாஜக ஒரு இடத்தில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணியும் கோவாவில் ஒரு இடத்தில் மட்டுமே வெல்லும். மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

யூனியன் பிரதேசம்
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, டாமன் டையூவில் இருக்கும் ஒரு இடத்தில் பாஜக கூட்டணிதான் வெற்றிபெறும். அதேபோல் பெரும்பாலான யூனியன் பிரதேசங்களில் பாஜக கூட்டணிதான் வெல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

உத்தர பிரதேச நிலை
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, உத்தர பிரதேசத்தில் 80ல் 27 இடங்களில் பாஜக வெல்லும்.பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 51 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணி இரண்டு இடங்களை வெல்லும். மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

இதுதான்
உத்தர பிரதேசத்தில் சென்ற முறை பாஜக 70க்கும் அதிகமான இடங்களை வென்றது. ஆனால் இந்த் முறை அப்படி இருக்காது என்று கூறப்படுகிறது. இதுதான் பாஜகவின் வெற்றியை இந்த தேர்தலில் கேள்வி குறியாகும் என்று கூறுகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications