மஹுவா மொய்த்ராவுக்கு சிக்கல்.. சம்மன் அனுப்பிய லோக்சபா நெறிமுறை குழு.. அடுத்து என்ன நடக்கும்?
டெல்லி: லோக்சபாவில் அதானி முறைகேடு குறித்த கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக எழுந்துள்ள புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதுபற்றி தற்போது நாடாளுமன்ற நெறிமுறை குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தான் அங்கு முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பி மஹுவா மொய்த்ரா.

இவர் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக அதானி மீதான முறைகேடு குறித்து நாடாளுமன்றம் மற்றும் வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.
இந்நிலையில் தான் லோக்சபாவில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதற்கான மஹுவா மொய்த்ரா எம்பி தொழிலதிபர் தர்ஷன் ஹிராந்நதானியிடம் இருந்து பணம், பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் லோக்சபாவில் அதானி குறித்து கேள்வி கேட்க மஹுவா மொய்த்ரா எம்பிக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக்கொண்டுள்ளார். பணம் வழங்கியதாகவும், வெளிநாடு பயணங்களுக்கான செலவை ஏற்றதாகவும் அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவில் இன்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ரி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து தான் மஹுவா மொய்த்ரா எம்பிக்கு நாடாளுமன்ற நெறிமுறைக்குழு சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் புகார் தொடர்பான விசாரணைக்கு வரும் 31ம் தேதி ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவும் நெறிமுறைக்குழு முடிவு செய்துள்ளது.
அதோடு மட்டுமின்றி மஹுவா மொய்த்ரா வெளிநாடுகளுக்கு சென்ற விபரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறவும் நெறிமுறைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணையின்போத மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம். இதனால் மஹுவா மொய்த்ராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications