பிரதமர் மோடியிடமிருந்து திடீரென ஒரு தமிழ் ட்வீட்.. திருக்குறள் பற்றி புகழாரம்
டெல்லி: திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்தில் லடாக் சென்று ராணுவ வீரர்களை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி. வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது, படைமாட்சி அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, திருக்குறள் ஒன்றை அவர் குறிப்பிட்டார்.

"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு" என்ற திருக்குறளை அவர் உச்சரித்தார். பிறகு இதற்கு ஹிந்தியில் விளக்கமும் கொடுத்தார்.
"வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடத்தை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்." என்று இதற்கு மு.வரதராசன் தெளிவுரை எழுதியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழ் வார இதழ் ஒன்றில், மோடியின் திருக்குறள் உதாரணம் பற்றி எழுதிய கட்டுரையை, நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஷேர் செய்துள்ளார். மேலும், அதில் மோடி திருக்குறள் பற்றி மேலும் சில புகழுரைகளையும் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். இவ்வாறு ஒரு ட்வீட் செய்துள்ளார் மோடி.

அடுத்த ட்வீட்டில், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுவதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழில் ட்வீட் செய்துள்ள மோடி, இதே கருத்தை மற்றொரு ட்வீட்டில் ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications