பாஜகவுக்காக வரிந்து கட்டும் வாசன் - எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பாமக அன்புமணியுடன் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் வலிமையான கூட்டணியை அமைத்துவிட வேண்டும் என்பதற்காக பாஜகவின் தூதராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவுமே இல்லை. தற்போதைய நிலையில் தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகியவை பாஜகவிடம் இருந்து விலகியே நிற்கின்றன. ஏற்கனவே அண்ணா திமுக, கூட்டணியை விட்டு விலகி மெகா கூட்டணிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பாஜக தலைமையில் அதிமுகவையும் உள்ளடக்கிய மெகா கூட்டணியால்தான் ஆதாயம் என்பது மேலே குறிப்பிட்ட கட்சிகளின் நிலைப்பாடு.

TMC Chief GK Vasan to meet PMK President Anbumani for BJP lead Alliance

எடப்பாடியுடனான வாசன் பேச்சுவார்த்தை: இந்த சூழலில் அண்மையில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜிகே வாசன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அதிமுக தொடர வேண்டும் என்ற "டெல்லி"யின் விருப்பத்தை வெளிப்படுத்தினாராம் ஜிகே வாசன். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ, நீங்க அதிமுக கூட்டணிக்கு வாங்க.. 2 லோக்சபா சீட் தர தயாராக இருக்கிறோம் என பிளேட்டை திருப்பி போட்டாராம் எடப்பாடி பழனிசாமி. இதனால் ரொம்பவே நொந்து போன நிலையில்தான் ஜிகே வாசன் அங்கிருந்து கிளம்பினாராம்.

பாமகவின் முயற்சிகள்: இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் பாமகவை தக்க வைக்கும் முயற்சியாக டெல்லியில் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸை சந்திக்க இருக்கிறாராம் ஜிகே வாசன். பாஜக, பாமக, தேமுதிக, தமாகா என இருக்கிற கட்சிகளாவது ஒன்றாக ஒரே கூட்டணியில் இருப்போம்; அப்படியாவது ஒன்றிரண்டு தொகுதிகளை பெற முயற்சிப்போம் என்பதுதான் ஜிகே வாசனின் அஜெண்டா. பாமக தரப்போ திமுகவுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் பாஜகவுடன் அதனையடுத்து அதிமுகவுடன். இதில் திமுக தரப்பில் இருந்து சரியான சிக்னல் கிடைக்கவில்லை. திமுக தரப்பும் பாமகவை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஜரூராக நடத்தி வருகிறது.

அதிமுகவை நோக்கி பாமக: இதனால் பாமகவுக்கு இருக்கும் இரு வாய்ப்புகள் பாஜக அல்லது அதிமுக கூட்டணிதான். பாஜகவிடம் மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா சீட் ஆகிய வாக்குறுதிகளை திடமாக எதிர்பார்க்கிறது பாமக. ஆனால் இப்போதைக்கு சொல்லி வைப்போம்; பின்னர் பார்ப்போம் என்கிற ரேஞ்சில்தான் பாஜக தரப்பு பேச்சுகள் இருப்பதாக பாமகவுக்கு ஒரு ஆதங்கம் இருந்து வருகிறது. இதனால் அண்ணா திமுக கூட்டணிக்கு போய் 10 தொகுதிகளைக் கேட்டு பெற முடியுமா? என்கிற முயற்சியில் இறங்கி இருக்கிறது பாமக. பாமகவின் சிறப்பு பொதுக்குழுவும் கூட பாஜக, திமுகவை விமர்சிக்கும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது. இதன் மூலமாக அண்ணா திமுகவை நோக்கி பாமக வேகமாக நகருகிறது என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.

டெல்லி வாக்குறுதிகள்: தற்போது பாமகவின் இந்த வேகத்தைத் தடுக்க, பாஜக பக்கம் திருப்ப டெல்லியில் அன்புமணியை சந்திக்கிறார் ஜிகே வாசன். பாஜக மேலிடம் கொடுக்கும் நம்பிக்கையான வாக்குறுதிகளை அன்புமணியிடம் தெரிவிப்பாராம் ஜிகே வாசன். எப்படியாவது பாமகவையாவது கொண்டு வந்து தமக்கு தரப்பட அசைன்மெண்ட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்கிற கவலையோடு காய் நகர்த்துகிறாராம் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+